கலையாத மௌனம் ...



காலையில் கண் விழித்தபோதே ..
மனதில் ஏதோ ஒரு ...தனி உணர்வு ..
எப்படி என சொல்வது தெரியவில்லை ...
அதோ !!!....என்ன ஆச்சர்யம் ..
எனக்கு பதில் வந்துவிட்டது ...
ரெம்ப மகிழ்ச்சியாகி விட்டது ...
வந்த மடலில் பெரிதாக எதுவும் இல்லை ...

அவளைப்பற்றி இரண்டு வரி ......
என்னை பற்றி அதிக கேள்விகள் ...
உண்மையான பெயர் ...எந்த ஊர் ....எனது கைபேசி எண் எது ....
என கேட்டு அழகாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்..

மீண்டும் பதில் எழுதினேன் ...

என்றும்
இனிய தோழிக்கு
நலம் நலமா?...
உன்னை எப்படி அழைப்பது ?..
நீ ?... நீங்கள் ?...
எனக்கு தெரியவில்லை...
ஒரு வேளை நீ
என்னை விட முதியவளாய் ..
நல்ல குடும்ப தலைவியாக ..
சிறந்த தாயாக.... இல்லை
ஏதாவது ஒரு அதிஷ்டசாலிக்கு..
அழகான காதலியாக....
எனக்கு தெரியவில்லை ...

என்ன வேலை ?.....எங்கு வேலை ?...
எவரெல்லாம் வீட்டில் ?....
என்னவெல்லாம் உன் ஆசைகள் ?..
என ஏராளமான கேள்விகள்
எனக்குள் ....

நீ தானே பதில் எல்லாம்
எனது கற்பனைக்கே விட்டு விட்டு
வேடிக்கை பார்க்கிறாயே ...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி ..
மென்மையானவள் மனதில் ...
அதனால் தானே ...


உன் கவிதைகள் அனைத்தும்
தாலாட்டையே உறங்க வைக்கும்
தனிப்பாட்டாய் நிற்கிறது ..

உன் தொலைபேசி எண்ணை
தெரிவிப்பாய் என நினைத்தேன்...
அதற்கும் மௌனம்...

என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்...


மௌனம் தான் கலையாமல் பேசுவது எப்படி ?..


அதிகம் எழுதிவிட்டேன் ...
அடுத்து உனது பதில் கண்டு ...


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..


அவளைப்பற்றி ..எதுவுமே சொல்லாமல்...
என்னை பற்றி அதிகம் கேட்டதில்...
ரெம்ப பயப்படுகிறாள் என்று மட்டும் தெரிந்தது ...
சரி பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறது என ..
அனுப்பிவிட்டேன்...இந்த மடலை ...
என்ன பார்த்தீங்களே ....என்னோடு கடிதத்தை ...

இதுக்கு மேல சாப்டா ..எப்படிங்க லெட்டர் எழுதறது.....


A for Apple...‏


நண்பர்களே ..வணக்கம் ...
நமது தலை அதாங்க.....
உருப்புடாதது_அணிமா
அவர்கள் ஆசைப்படி
( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ ..தொடர் பதிவு )

A for apple ... வலை தளங்கள் சொல்லணும் ...
A B C .. வச்சு கவிதை எழுத்து டா.. அப்படின்னா ...

Asin அழகா இருக்காக ..
Chitra ஸாப்டா இருக்காக ..ன்னு
ஏதாவது பிட்ட போடலாம் ...
இது Site எல்லாம் சொல்லனுமே ...
ப்பா ...கண்ண கட்டுதே ...

ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச Site
எல்லாம் சொல்லி இருக்கேன் ..
பார்த்திட்டு சொல்லுங்கோ ...
நண்பர்களே ...

A - http://www.ask.com/
இத பத்தி பெரிசா சொல்ல வேண்டியதில்லை ..
உங்களுக்கே தெரிந்திருக்கும்...எனக்கு
தெரியாது என எப்பவும் சொல்லாத தளம் ..

B -http://books.google.com/
கூகிள் தரும் பயனுள்ள தளம் ...புத்தக தேடல்களுக்கு

C - www.coolhunting.com/
கலை , வடிவமைப்பு , புதினங்கள் அனைத்தும் இங்கு பார்க்கலாம்
தினசரி இங்கு தகவல்கள் புதுப்பிக்க படுகிறது ..

D - www.dhg.org.uk/
மருத்துவ பகுதி ..இதயம் பற்றிய அனைத்து
தகவல்களுக்கும் உதவிகளுக்கும் இங்கு ..

E - www.ebay.com/
அப்பா அம்மா ..வேண்டும் என்றால் கிடைக்காது
அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே ..
இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...

F - www.finalsense.com/
நல்ல வலை தளம் .. ப்ளாக்கர் வலை தளங்களுக்கு
நல்ல டேம்பிளேட்ஸ் இங்கு கிடைக்கும் இலவசமாக

G - girgit.chitthajagat.in/
மொழி தெரியாத வலை தளங்களில் சிக்கி
கண்ணை கட்டி விட்டதுபோல இருக்கிறதா ..
கவலை வேண்டாம் இங்கு செல்லுங்கள் ..
முடிந்தவரை நமக்கு தேவையான மொழியில்
மொழிபெயர்த்து தருவார்கள் ..
எனக்கு பிடித்த தளங்களில் இதுவும் ஒன்று ..

H - www.hi5.com/
ஓர்குட் போல நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...

I - www.incredibleindia.org/
இந்தியா பற்றிய அனைத்து பயண தகவல்களுக்கும்
மற்றும் காணவேண்டிய சுற்றுலா இடங்கள்
அனைத்தும் விரிவாக இங்கு காணலாம்

J -http://www.jeevansathi.com/
திருமண செய்ய காத்திருப்பவர்கள் இங்கு ஏராளம் ..
ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..

K - http://www.keralatourism.org/
கேரளா எனக்கு ரெம்ப பிடிக்கும் ...நல்ல சுற்றுலா இடம் ..
நிறைய இயற்கை காட்சிகள் அங்கு பார்க்கலாம் ..
அதை பற்றி தெரிந்துகொள்ள ...இங்கு போகலாம் ..

L - www.livevideo.com/
நிறையவே பார்க்கலாம் ...நேரம் கடத்தலாம் இங்கு ..

M - http://musicmazaa.com/tamil/
நல்ல பாடல்கள் ..இங்கு கிடைக்கும் .
நேரம் போவது தெரியாது ...
நல்ல வலை தளம் எனக்கு பிடித்தவைகளில் இதுவும் ஒன்று ...

N - www.nokia.com/
மொபைல்னா ...கொஞ்சம் வீக்னஸ் எனக்கு ...ஹி ஹி

O- http://www.orkut.com/
நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...
மொபைல் மாதிரி ...இதுவும் எனக்கு ...ஹி ஹி ..

P - http://picasa.google.com/
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ..
புகை படங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே
கூகுளின் மற்றொரு சேவை ...

Q - quillpad.in/tamil/
தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் வரும் வரை
நான் இதை மட்டுமே நம்பி இருந்தேன் ..

R - www.raaga.com/
மீண்டும் ஒரு நல்ல வலைத்தளம் பாடல்களுக்கு ..
எனக்கு பிடித்தவைகளில்...
(என்ன செய்ய... பாட்டு நமக்கு உயிர் நாடி ..)

S- www.sxc.hu/
எனக்கு மிகவும் பிடித்த வலை தளம் ...
புகை படங்களோடு விருப்பம் உள்ளவர் ..
கண்டிப்பாக போகவேண்டிய தளம் ..
எல்லா தலைப்புகளிலும் ஏராளமான புகைப்படங்கள் ..இங்கு ..

T - http://www.tutorialized.com/
போட்டோ ஷாப் படிப்பவர்களுக்கு
உதவியாக இருக்கும் வலை தளங்களில் இதுவும் ஒன்று ...

U- www.usertube.com/
நேரம் போக இங்கும் போகலாம் ...

V- www.vijaynet.com/
விஜய் என்றால் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்..
அவரை பற்றி இங்கு...

W - http://www.webshots.com/
இந்த வலை தளம் நல்ல வலை தளம் ...
புகை படங்கள்...சேமிக்க ..அனைத்திற்கும்...
எனக்கு உதவியாக இருக்கு ..

X - www.xe.com/
தினசரி நிலவரம் ..கரன்சி ...

Y- http://www.youtube.com/
அறிமுகம் தேவை இல்லாத தளம்

Z - http://www.ziddu.com/
புகை படங்கள்...சேமிக்க ..மீண்டும் ஒரு தளம் ...

ம்ம் ஒரு வழியா ... முடிச்சிட்டேன் ...
இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...

ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் அவர்கள் ..
ரெண்டு நம்ப அண்ணன் குட்டிபிசாசு அவர்கள்
மூணு நம்ப நண்பர் திகழ்மிளிர் அவர்களையும்
அன்புடன் அழைக்கிறேன் ..

Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People

இரண்டாவது கடிதம் ....


முதல் கடிதம் போட்டு
பதில் வராத சோகம் மனதில் ...
நாட்கள் நான்கைந்து முடிந்தது ..
இனியும் பதில் வரவில்லை ..
என்ன செய்வது என தெரியவில்லை ..

மனதில் சிறிதாக ஒரு நெருடல்...
தேவை இல்லாமல்..
மடல் எழுதி நமது மரியாதையை
நாமே கெடுத்துகொண்டோமா என ..
இந்த சிந்தனையில் இரண்டு நாட்கள் கடந்தன ...

அடுத்தநாள் ஒரு மடல் கூட
எழுதினால் என்ன என
மீண்டும் மீண்டும் தோன்ற ..
சரி எழுதிவிடலாம் என முடிவு செய்து விட்டேன் ..

ஆனால்..உள்மனம் சொன்னது ..
டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...
வேண்டுமென்றால் சின்னதாக
ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..என ...
அப்படியே எழுதலாம் என முடிவு செய்து
அடுத்த கடிதம் எழுதினேன் ...

என் இனிய தோழியே ...
உன் மடல் வராததால்
உன்மீது அதிக கோபமாக இருந்தேன் .
மன்னிக்க வேண்டுகிறேன் ..
எனக்கு தெரியாது ..
நீ மடல் எழுத நினைத்தபோது
மசி தீர்ந்த கதை ..

அன்புடன்
புரியாத புதிராய்
உன் இனிய நண்பன்
விஷ்ணு ...

இது தாங்க நான்
இரண்டாவதாக அந்த தோழிக்கு எழுதிய மடல் ...
இதுக்கு பதில் வரலைன்னா
இனி கடிதம் போடுவதில்லை என முடிவு செய்து
இதை அனுப்பி விட்டேன் ..
பதில் வந்தது ..
எப்படி இருந்தது பதில் என
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..
இப்போ உறக்கம் வருகிறது ..
நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில்
அனைவரையும் சந்திக்கிறேனே ...

அன்புடன் ...
விஷ்ணு ...