மாட்டிகிட்டேன் ..சினிமாவில் ( தொடர் பதிவு )
அன்பு நண்பர்களே ...
இங்க பாருங்க நம்ப நண்பர்
உருப்புடாதது_அணிமா உருப்புடாதது_அணிமா அவர்கள்
என் மேல ரொம்பவே பாசம் அதிகம் ..
இந்த தொடர் பதிவில் எனக்கும்
ஒரு படம் காட்ட சான்ஸ் குடுத்திருக்கார் ..
ரெம்ப நன்றி நண்பரே ..
இவர் எனது தலைவர் எனவும் இந்த நல்ல நேரத்தில்
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..
( நம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ..
மேக் அப் ..தம்பி ..அந்த பவ்டறு கொஞ்சம் நல்லா பூசு...
எங்க போட்டோ புடிக்கிரவரு ..நின்னுகிட்டா எடுக்கிறா ???..
நிம்மதியா உட்கார்ந்து எடு ...)
எனவே மக்களே ..என் பேட்டிய படிங்க
அப்ப கேள்விய ..நீங்க கேட்றீங்களா இல்லை நான் கேட்கட்டுமா ?..
ஒ.. நான் பதில் மட்டுமே சொல்லனுமா .....அப்ப கேளுங்க ...
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
நான் சினிமா பார்த்ததெல்லாம்
நல்லா நினைவு வந்த பின்னால தாங்க ..
காரணம் இருக்குங்கோ ..அப்பா ரொம்ப கண்டிப்பானவருங்கோ ..
அழுது அடம் பிடிச்சு மொத மொதல்ல பார்த்த படம்னுனா
சிரிக்க கூடாது ..ஸ்கூல்லே இருந்து கூட்டிட்டு போனாங்கங்கோ ..
( ஓய் ..என்ன சும்மா ங்கோ ...நிறுத்திட்டேன் நிறுத்திட்டேன் ...)
பள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..
படத்தோட பேரு மறந்திட்டேன் ..விட்டுருங்க ..
கதை ஒரு பள்ளி மாணவனின் கதை என்ற நினைவு ..
அப்போ நான் இரண்டாம் வகுப்பில் படித்த நினைவு ..அதாவது 7 வயசு ..
அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..
ஆனால்..ரோட்டில ..வரிசையா ..நடந்து போனதும் ..
மஞ்சுளா டீச்சர் குச்சியோடே வந்ததும்..நல்லா நினைவு இருக்கு ..
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
கடைசியா ..அரங்கில் பார்த்த படம் என்றால் ..அது குருவி ..
அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தேன் ..குவைத்தில் சிவாஜி ..
அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன் ..
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி என்று சொன்னால் ..
காக்க காக்க ..ஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )
இங்க நாம நெனைக்கிற மாதிரி எல்லா படமும் ரிலீஸ் ஆகாது ..
CD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ..
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பெரிசா தாக்கலை ஆனால் பிடித்த படங்களில்
7 -ஜி ரெயின்போ காலனி ...
அந்த கதை கொஞ்சம் வித்யாசமாக
தெரிந்தது எனக்கு என நினைக்கிறேன்
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ஒண்ணுமே இல்லை எனலாம் ...
சில நேர பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்னை பொறுத்தவரை
5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்
DTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்
நல்ல படம் ..நல்ல கதை என ..உண்மைதாங்க நம்புங்க ...
7.தமிழ்ச்சினிமா இசை?
இசை ஞானி இளைய ராஜா ...
இசைப்புயல் A .R ரஹ்மான் இருவரின்
இதயத்தை வருடி செல்லும் இதமான மெல்லிசை ...பாடல்கள் ...
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்
மதிலுகள்,. போன்றவை
ஆங்கிலம் பார்ப்பதுண்டு நிறையவே ..
இதில் கொஞ்சம் தாக்கியது என்றால் டைட்டானிடிக் எனலாம் ..
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இப்ப வரை நேரடி தொடர்பில்லை
நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..
அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க
என்ன செய்ய ..நீங்களே சொல்லுங்க ..
( நாம மேம்படலாம்னா விட மாட்டங்களே நம்பல )
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு ஒண்ணுமே ஆகாது ...அது நல்லா தெரியும் ...
தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் ..
அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...
ஏதோ என்னையும் மதித்து அழைத்த
உருப்புடாதது_அணிமா அவர்களுக்கு நன்றிகள்..
எனது சொந்த கருத்துக்களை மட்டுமே
சொல்லி இருக்கிறேன் இந்த பதிவில் ..
இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..
விரல் தூரிகையில்
ஓவியங்கள்
பல படைக்கும்
நண்பர் தமிழ்ப்பறவை
மருத்துவ துறையிலும்
எனது கவிதை துறையிலும்
காவியங்கள் பல படைக்கும்
நண்பர் தங்கராசா ஜீவராஜ்
காவல் துறையிலும்
கவிதை துறையிலும்
அரசனான எனது நண்பர்
மா. கலை அரசன்
நண்பர்களே மறக்காமல் பதிவு இட வேண்டுகிறேன் ...
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
பாக்கி எல்லாருமே இதே பதிவை போட்டு விட்டதால்
இத்துடன் நிறுத்துகிறேன் ..
அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு
Subscribe to:
Post Comments (Atom)
81 comments:
அன்பினால் நலம் விசாரிக்க நீங்கள் இருக்கும்போது, எங்கள் நலத்திற்கென்ன குறைச்சல் வந்துவிடப் போகிறது தலைவரே....
தங்கள் பதிவை இப்போதுதான் படித்துமுடித்தேன்.
//அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன்//
நாங்கெல்லாம் தியேட்டர்ல படுத்துக்கிட்டா பார்க்குறோம்...?!
//( ஹி ஹி .. நம்ப ஜோ )// அதெல்லாம் அப்போ....
//பெரிசா தாக்கலை//
'குத்து'ன்னு ஒரு படம் இருக்கு. பாருங்க..தாக்கு,தாக்குன்னு தாக்கும்...
//மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்//
நாங்க நம்பிட்டோம்...
//அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..//
தானாவே கெட்டுப்போறதுக்கு, நாம ஒண்ணும் துணை போக வேணாம்.விட்டுடுங்க தலை...
//அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...//
பிரதமர்,முதல்வர விட்டுடீங்க...ஆனாலும் குசும்புங்க....
அழைத்ததற்கு நன்றிகள் விஷ்ணு...முயற்சிக்கிறேன்...
வணக்கம் விஷ்ணு
////அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..//
இப்ப நிலவரம் எப்படி?
//தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்
நல்ல படம் ..நல்ல கதை என ..உண்மைதாங்க நம்புங்க ...///
நீங்க சொன்னா நம்பித்தானே ஆகணும்
///நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..
அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க///
???????????
அழைத்ததற்கு நன்றிகள்
முயற்சிக்கிறேன்...
அன்புடன் ஜீவன்
தமிழ்ப்பறவை said...
// அன்பினால் நலம் விசாரிக்க நீங்கள் இருக்கும்போது, எங்கள் நலத்திற்கென்ன குறைச்சல் வந்துவிடப் போகிறது தலைவரே....
தங்கள் பதிவை இப்போதுதான் படித்துமுடித்தேன்.//
மிக்க மகிழ்ச்சி நண்பரே ..
//அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன்//
நாங்கெல்லாம் தியேட்டர்ல படுத்துக்கிட்டா பார்க்குறோம்...?! //
அடடா ..இப்படி ஒரு மேட்டர் இருக்கா ..விட்டு போச்சே ....
//( ஹி ஹி .. நம்ப ஜோ )// அதெல்லாம் அப்போ....
கரக்ட் நண்பா .. ...பார்த்தேன் சமீபத்தில் குழந்தையுடன் ..
//பெரிசா தாக்கலை//
'குத்து'ன்னு ஒரு படம் இருக்கு. பாருங்க..தாக்கு,தாக்குன்னு தாக்கும்...//
பார்த்திட்டா போச்சு ...நண்பரே ...
(ரொம்ப தாக்குமோ ..எதுக்கும் புல்லட் ப்ரூப் டிரஸ் ஏற்பாடு பண்ணிக்கலாம் )
//மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்//
நாங்க நம்பிட்டோம்...
அட உண்மை தாங்க ...நம்புங்க ..
குவைத்துல ..கோவில் கிடையாது ....
இல்லாட்டி சத்தியமே பண்ணிருவேன் ..
//அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க .
தானாவே கெட்டுப்போறதுக்கு,
நாம ஒண்ணும் துணை போக வேணாம்.விட்டுடுங்க தலை...//
நீங்க சொன்னா சரி ..தலை ..
//அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...//
பிரதமர்,முதல்வர விட்டுடீங்க...
நம்ப நாட்டோட தலை எழுத்து ...என்ன பண்ண தலைவா ..
// ஆனாலும் குசும்புங்க....//
என்ன செய்ய கோயம்பத்தூர் ஆச்சே ..
//அழைத்ததற்கு நன்றிகள் விஷ்ணு...முயற்சிக்கிறேன்...//
சீக்கிரமா பதிவ போடு தலை ...
பாக்கிய நான் பாத்துக்கிறேன் ....
வருகைக்கும் எனது விண்ணப்பத்திற்கு இணங்க பதிவு போட சம்மதித்தற்கும்
எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே ..
விரைவில் உங்கள் பதிவை எதிர் நோக்கி ..
அன்புடன்
விஷ்ணு
//தங்கராசா ஜீவராஜ் said...
வணக்கம் விஷ்ணு
////அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..//
இப்ப நிலவரம் எப்படி?
இப்போ ஓகே நண்பரே ..கொஞ்சம் எல்லாம் புரியற மாதிரி இருக்கு ..
//தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்
நல்ல படம் ..நல்ல கதை என ..உண்மைதாங்க நம்புங்க ...///
நீங்க சொன்னா நம்பித்தானே ஆகணும்..
அடடா இந்த ஊர்லே நம்ப சொல்றதையும் இப்பவும் நம்பறாங்களே ..
///நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..
அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க///
???????????//
அப்படியாவது ஒரு சான்ஸ் கிடைக்குமானு ..முயற்சி தான் நண்பரே ..
அழைத்ததற்கு நன்றிகள்
முயற்சிக்கிறேன்...
அன்புடன் ஜீவன்//
வருகைக்கும் வாழ்த்துக்கும்
எனது அன்பான வேண்டுகோளுக்கிணங்க
பதிவிட சம்மதம்
தெரிவித்தமைக்கும்
எனது மனமார்ந்த நன்றிகளுடன்
என்றும்
இனிய உங்கள் நண்பன்
விஷ்ணு ..
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
ஃஃஇவர் எனது தலைவர் எனவும் இந்த நல்ல நேரத்தில்
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..
ஃஃ
அட எனக்குத்தெரியாம கட்சிறெல்லாம் ஆரம்பிச்சாச்சா???
ஃஃநம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ஃஃ
இங்க பார்ரா பில்டப்ப!!!
ஃஃஎனவே மக்களே ..என் பேட்டிய படிங்கஃஃ
வேற வழியே இல“லியே!!!!!!
ஃஃபள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..ஃஃ
மை டியர் குட்டிச்சாத்தானா ஃஃஃஃ
ஃஃஅப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன் ..
ஃஃ
அட நீங்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கீங்களே!!!!!!!!!!!!!
ஹிஹி
ஃஃஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )ஃஃ
ம்ம்ம் நம்ிட்டோம்
ஃஃCD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ..ஃஃ
சிடி யவிட இதெல்லாம் எவ்வளவோ தேவல
ஃஃ மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பெரிசா தாக்கலைஃஃ
தாக்கலனா ???
அடி உதை அப்படி ஏதாச்சுமாங்க??
ஃஃஅந்த கதை கொஞ்சம் வித்யாசமாக
தெரிந்தது எனக்கு என நினைக்கிறேன்ஃஃ
ஹிஹி
ஏனுங்க?? ஏதாச்சும் பழைய ஞாபகம் வந்துச்சா என்ன?
ஃஃசில நேர பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்னை பொறுத்தவரைஃஃ
நல்ல பழக்கம் விஷ்னு
ஃஃDTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது
ஃஃ
உண்மைதான்
எனக்கு பிடித்ததும் இதுவேதான்
ஃஃஇசை ஞானி இளைய ராஜா ...
இசைப்புயல் A .R ரஹ்மான் இருவரின்
இதயத்தை வருடி செல்லும் இதமான மெல்லிசைஃஃ
ரிப்பீட்டேய்
ஃஃஇப்ப வரை நேரடி தொடர்பில்லை
நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலைஃஃ
அது பாவங்க. விட்ருங்களென்!!!!!!
ஃஃஅவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க
என்ன செய்ய ..நீங்களே சொல்லுங்க ..ஃஃ
ஆஹா உங்களுக்குத்தான் என்ன ஒரு பரந்ந்ந்ந்ந்ந்ந்த பெரிய்ய்ய்ய்ய்யயயய மனசு!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஃஃஅதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..
ஃஃ
ரிப்பீட்டேய்
நல்லாருக்கு அண்ணா...!! :))))))
நாங்க திரும்பி வந்துடோம்ல இனி பட்டைய கிளப்பிடுவோம்ல//..
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
மீண்டும் பிறகு வருகிறேன் ..
( இப்போதைக்கு அப்பீட்ட்டு அப்பாலிக்க ரிப்பீட்டு)
// Subash said...
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல
வந்துட்டோம்ல//
வாங்க சுபாஷ் ...வாங்க
(வாங்கப்போறது நானு ..கடவுளே என்னை காப்பாத்து ..)
//Subash said... அட எனக்குத்தெரியாம கட்சிறெல்லாம் ஆரம்பிச்சாச்சா???//
செயலாளரே நீங்க தானே ..
(தெரியாத மாதிரி கிண்டல் ..)
// Subash said...
ஃஃநம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ஃஃ
இங்க பார்ரா பில்டப்ப!!!//
கொஞ்சம் ஆள் பெரிசானா விட மாட்டீங்களே ...
( நானும் ஒரு பேட்டி குடுக்கிரேனே ..கொஞ்சம் விடுங்களே ..தலைவா ..கெஞ்ச வேண்டியதா இருக்கே ...)
// Subash said...
ஃஃஎனவே மக்களே ..என் பேட்டிய படிங்கஃஃ
வேற வழியே இல“லியே!!!!!!//
ம்ம் அப்படி வாங்க வழிக்கு ..
//Subash said...
ஃஃபள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..ஃஃ
மை டியர் குட்டிச்சாத்தானா ஃஃஃஃ//
இல்லை நண்பரே ..இது வேற படம் ..
(படத்துல நடிச்ச பொண்ணு பேரு நல்லா ஞாபகம் இருக்கு பேரு கமலா ..ஹி ஹி )
Subash said... அட நீங்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கீங்களே!!!!!!!!!!!!!
ஹிஹி..
நின்னுகிட்டே பார்த்த கால் வலிக்குமே ..
:-))
// Subash said...
ஃஃஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )ஃஃ
ம்ம்ம் நம்ிட்டோம்//
சத்தியமா நம்புங்க ..இதுக்கெல்லாம் பொய் ஜோ கிட்ட கேட்டு உறுதி செய்ய முடியுமா ..தலை ..
//Subash said...
ஃஃCD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ..ஃஃ
சிடி யவிட இதெல்லாம் எவ்வளவோ தேவல //
உண்மை தான் நண்பரே ..
//Subash said...
ஃஃ மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
பெரிசா தாக்கலைஃஃ
தாக்கலனா ???
அடி உதை அப்படி ஏதாச்சுமாங்க??//
அந்த தாக்குதலா ???
(நான் தான் கேள்விய அணிமா மாதிரி தப்ப புரிஞ்சுகிட்டேனோ )
அது நெறைய இருக்கு நண்பரே ..
டிக்கெட் வாங்க ..முதல் நாள் ..முதல் ஷோ ..
//Subash said...
ஹிஹி
ஏனுங்க?? ஏதாச்சும் பழைய ஞாபகம் வந்துச்சா என்ன? //
இப்பிடி பப்ளிக்கா கேட்டு
மானத்த வாங்க கூடாது ..
ஆமா சொல்லிட்டேன் ...அழுதிருவேன் ...
//Subash said...
நல்ல பழக்கம் விஷ்னு//
தாங்க்ஸ் நண்பரே ..
( அப்பா ஒரு வழிய தலை கிட்ட பாராட்டு ..)
Subash said...
ஃஃDTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது
ஃஃ
உண்மைதான்
எனக்கு பிடித்ததும் இதுவேதான்
தாங்க்ஸ் நண்பரே ..
தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!
தங்களின் அனுமதியில்லாமல் கணனி சம்பந்தமான தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
நேரமிருந்தால் சில தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளலாமே!!!
மேலதிக தகலவ்களுக்கு
http://hisubash.wordpress.com
மிக்க நன்றி.
சுபாஷ்.
நல்ல்ல்ல்ல்ல்ல பதிவு விஷ்ணு:)
நாங்க அப்படி பள்ளியிலிருந்து வரிசையா அழைத்துப்போகப்பட்டு பார்த்த சினிமா 'மீனாவின் கடிதம்' என்று நினைவு. பெயர் சரியா தெரியல விஷ்ணு.
ஒரு பெரிய மீனை, சின்ன மீன்கள் கூட்டமா சேர்ந்து பெரிய மீன் போல தோற்றம் கொடுத்து துரத்துகிற சீன் வரும். மறுபடியும் பார்க்க விருப்பம். எங்கே கிடைக்கும் இது போன்ற படங்கள் தெரியல.
//இங்க பாருங்க நம்ப நண்பர்
உருப்புடாதது_அணிமா உருப்புடாதது_அணிமா அவர்கள்
என் மேல ரொம்பவே பாசம் அதிகம் ..///
என்னது இது??
ஒன்னும் புரியலயே ??
நல்லதுக்கு தானா இது ??
///இந்த தொடர் பதிவில் எனக்கும்
ஒரு படம் காட்ட சான்ஸ் குடுத்திருக்கார் ..
ரெம்ப நன்றி நண்பரே ..///
படம் தான் காட்ட போறீங்கன்னு சொல்ல வரீங்க..
காட்டுங்க காட்டுங்க
//இவர் எனது தலைவர் எனவும் இந்த நல்ல நேரத்தில்
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..///
ஆசைபடுகிறேன்னு சொல்லிபுட்டு இப்படி நம்மள போட்டு குடுத்தியே ராசா??
ஆட்டோ எல்லாம் எனக்கு அனுப்ப சதி நடக்குதா ??
///( நம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ..///
கையில மைக்கோட யார் வந்தாலும் உடுறது இல்ல??
///மேக் அப் ..தம்பி ..அந்த பவ்டறு கொஞ்சம் நல்லா பூசு... ///
அப்போவாச்சும் வெள்ளையா தெரியுரோமா பாரு ..
///எங்க போட்டோ புடிக்கிரவரு //
அவுரு நீங்க எதுனா கீழ போட்டா புடிக்க போயிருப்பாரு
நின்னுகிட்டா எடுக்கிறா ???..
நிம்மதியா உட்கார்ந்து எடு ...)////
நின்னுக்கிட்டு எடுத்தாலாவது ஓடி எஸ்கேப் ஆக சான்ஸ் இருக்கு.. ஒக்காந்து எடுத்தா எப்படி ஓடி போக முடியும் ??
//எனவே மக்களே ..என் பேட்டிய படிங்க///
எஸ்கேப் ஆக வேற வழியே இல்லியா??
அவ்ளோதானா??
அப்ப கேள்விய ..நீங்க கேட்றீங்களா இல்லை நான் கேட்கட்டுமா ?..///
பெரிய திருவிளையாடல் சிவாஜின்னு நினைப்பு...
மேட்டர்க்கு வாயா
///ஒ.. நான் பதில் மட்டுமே சொல்லனுமா .....அப்ப கேளுங்க ...////
இப்போவாச்சும் தெரிஞ்சுதே...
ஒரு வழியா வந்தாச்சு
//நான் சினிமா பார்த்ததெல்லாம்
நல்லா நினைவு வந்த பின்னால தாங்க .///
அதுக்கு முன்னாடி பாத்தா மட்டும் எப்படி நினைவில் இருக்கும்..
நல்லா சொல்ராங்கையா டீட்டைல்லு ??
///அழுது அடம் பிடிச்சு மொத மொதல்ல பார்த்த படம்னுனா
சிரிக்க கூடாது .///
சிறக்க கூடாதுன்னு சொன்னது நீங்க அழுததுக்கா??
ஹி ஹி ஹி ஹி அப்படி தான் சிரிப்போம்
நான் தான் அம்பது
பள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..////
அப்புறம் நீங்க எப்படி அந்த படத்துக்கு போனீங்க??
அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..///
நான் நம்பி தான் ஆகணும் ..
கதை ஒரு பள்ளி மாணவனின் கதை என்ற நினைவு ..///
உங்க கதை இல்லியே ???
ஆனால்..ரோட்டில ..வரிசையா ..நடந்து போனதும் ..
மஞ்சுளா டீச்சர் குச்சியோடே வந்ததும்..நல்லா நினைவு இருக்கு ..///
யோவ் படத்தோட பேரு மறந்து போச்சு.. மஞ்சுளா டீச்சர் குச்சியோட வந்தது மட்டும் நல்லா நினைப்புல இருக்கு ..
கடைசியா ..அரங்கில் பார்த்த படம் என்றால் ..அது குருவி ..///
யாரு விட்ட சாபமோ ??
அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன் ..///
அட இப்படி கூட படம் பாக்கலாமா??
இவ்ளோ நாளா தெரியாம போச்சே ...
தகவல்களுக்கு நன்றி ( நற நற )
காக்க காக்க ..ஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )///
இந்த விஷயம் ஜோ கணவர் சூர்யாவிற்கு தெரியுமா??
///இங்க நாம நெனைக்கிற மாதிரி எல்லா படமும் ரிலீஸ் ஆகாது ..
CD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ////
அது போதுமே..
செலவில்லாமல் படம் பார்க்க
///பெரிசா தாக்கலை ஆனால் பிடித்த படங்களில்
7 -ஜி ரெயின்போ காலனி ...////
என்ன எதுனா சேட்டு பொண்ணு நியாபகமா??
சும்மா சொல்லுங்க..
///7 -ஜி ரெயின்போ காலனி ...
அந்த கதை கொஞ்சம் வித்யாசமாக
தெரிந்தது எனக்கு என நினைக்கிறேன்///
சொந்த கதையோ?? இல்ல எதுனா சோக கதை இருக்கா??
///ஒண்ணுமே இல்லை எனலாம் ...
சில நேர பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்னை பொறுத்தவரை///
ரொம்ப நல்லவரா இருப்பீங்க போல இருக்கே ???
///DTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது///
சேம் சேம்... ரெண்டு பேருக்கும் அது தான் பெரிய தொழில்நுட்பம்
///எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்///
இது எல்லாம் கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் பில்ட்ப்பா இருக்கு ???
///இசை ஞானி இளைய ராஜா ...
இசைப்புயல் A .R ரஹ்மான் இருவரின்
இதயத்தை வருடி செல்லும் இதமான மெல்லிசை ...பாடல்கள் ../////
சேம் சேம் .... ஒழுங்கா ஒரு புல்ல வாங்கி அனுப்புங்க .
///மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்///
எந்தா நண்பரே சுகந்தன்னே ??
நானும் பார்ப்பேன்.. ஆனால் அதில் வசனமே இருக்காது
//ஆங்கிலம் பார்ப்பதுண்டு நிறையவே ..//
Why blood?? Same Blood...
///இதில் கொஞ்சம் தாக்கியது என்றால் டைட்டானிடிக் எனலாம் ..///
எது?? இந்த டைட்டா டானிக் அடிச்சா கிடைக்குமே கிக்கு,,,
அந்த டானிக்கா??
///இப்ப வரை நேரடி தொடர்பில்லை///
அப்பாடி தப்பிச்சோம் ...
///நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..///
அப்பாடி மீண்டும் தப்பிச்சாச்சு...
///அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க
என்ன செய்ய ..நீங்களே சொல்லுங்க ..///
அவார்டா? எதுக்கு ? இனி மேல நடிக்காதீங்க அப்படின்னு சொல்லி குடுப்பாங்களா??
///( நாம மேம்படலாம்னா விட மாட்டங்களே நம்பல )///
அது எப்படி நம்புவோம்? நாங்க எல்லாம் ரொம்ப உசாரு
///அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..///
நீங்க எதுவுமே செய்யாம இருந்தாலே அதன் எதிர்காலம் நல்லா இருக்கும் ..
///எனக்கு ஒண்ணுமே ஆகாது ...///
ரொம்ப தெளிவா தான்யா இருக்கீங்க??
///தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் ..
அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...///
சபாஷ்... சரியாக சொன்னீர்கள்..
ஆமாம் வருங்கால முதவர்களை விட்டு விட்டீர்களே ??
அம்பதும் நானே, 75m நானே...
யாருப்பா அங்க ஒரு ப்ளூ லேபிள் சொல்லுப்பா
சரி இப்போ போறேன்.. மறுபடியும் வருவேன்...
Anna aduththathu padhivu podaradhaa idea-ve illayaa??
//ஸ்ரீமதி said...
Anna aduththathu padhivu podaradhaa idea-ve illayaa??//
தங்கையே ..எனது கணனியில் பிரச்சனைகள் காரணமும் ..
வேலை பளுவும் கொஞ்சம் தாமதமாகி விட்டது பதிவிட ...
எல்லாம் சரியாகி விட்டது ..உடன் பதிவிடுகிறேன் ,,...
அடடா...என்ன ஒரு அட்டகாசமான பதிவு!
நகைச்சுவை உணர்வு ரொம்பதாங்க!
//அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன்//
ஒஹோ?
//என்ன செய்ய கோயம்பத்தூர் ஆச்சே ..//
இப்ப புரியுதுங்க.........எல்லாம் சிறுவாணி தண்ணி குடிச்சு வளர்ந்த தெம்பு!
////// தங்கையே ..எனது கணனியில் பிரச்சனைகள் காரணமும் ..
வேலை பளுவும் கொஞ்சம் தாமதமாகி விட்டது பதிவிட ...
எல்லாம் சரியாகி விட்டது ..உடன் பதிவிடுகிறேன் ,,.../////
என்ன ஆச்சு??
பதிவு போடுவீங்களா? மாட்டீங்களா??
ஒடனே போடல , அப்புறம் ஆட்டோ எல்லாம் வராது, பிளைட் தான் வரும்..
//என்ன ஆச்சு??
பதிவு போடுவீங்களா? மாட்டீங்களா??
ஒடனே போடல , அப்புறம் ஆட்டோ எல்லாம் வராது, பிளைட் தான் வரும்..
//
என்ன இன்னும் ப்ளைட் அனுப்பலயா? அடுத்த் வார இறுதியும் முடிய போகுது!! :-))
Post a Comment