உனக்கான
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை
வரச் சொன்னேன்....
அதுவோ,
தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
அதனால தானோ
புரட்டிப் புரட்டி
படிக்கிறேன்
படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?
மெதுவாகத்தானே
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம்
நடத்துவாய் என !!!!
உன்
நிழல் எழுத
முயல்கையில்
மீண்டும் மீண்டும்
இடறி விழுகிறேன் ...
கவனமாய்
எத்தனை எழுதியும்
காட்டமுடிவதில்லையே
கனிவான
உன் முழு மனதை ...
24 comments:
///பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
அதனால தானோ
புரட்டிப் புரட்டி
படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?///
அருமை விஷ்ணு....
//தங்கராசா ஜீவராஜ் said...
///பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
அதனால தானோ
புரட்டிப் புரட்டி
படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?///
அருமை விஷ்ணு....
முதல் பின்னுட்டம் நண்பரே ....//
மிக்க நன்றிகள் ..
நலமா ?? அன்புடன் பக்கம் வரைவது குறைந்து விட்டதே ..
வேலை அதிகமோ ??
கவிதை, படங்கள் அருமை விஷ்ணு!
//மெதுவாகத்தானே
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம்
நடத்துவாய் என !!!!//
எங்க ஊரில் சொல்லுவார்கள் "மழைக்கு ஒண்ட வந்த பிடாரி மண்ணுக்குச் சத்தம் போட்டுச்சாம்" அது தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர்கள் பிடாரி அம்மனைச் சொல்வது. இல்லத்தரசியும்(இல்லாள்) இல்லத்தை ஆளுகின்ற அம்மனைப் போன்றவர்கள் தானே! அதனால் பொருத்தமாகத் தான் இருக்கும்.
நல்லாருக்குங்க கவிதைகள் :)
//ஜோதிபாரதி said... கவிதை, படங்கள் அருமை விஷ்ணு!
//மெதுவாகத்தானே
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம்
நடத்துவாய் என !!!!//
எங்க ஊரில் சொல்லுவார்கள் "மழைக்கு ஒண்ட வந்த பிடாரி மண்ணுக்குச் சத்தம் போட்டுச்சாம்" அது தான் ஞாபகத்துக்கு வந்தது. அவர்கள் பிடாரி அம்மனைச் சொல்வது. இல்லத்தரசியும்(இல்லாள்) இல்லத்தை ஆளுகின்ற அம்மனைப் போன்றவர்கள் தானே! அதனால் பொருத்தமாகத் தான் இருக்கும்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ..ஜோதி பாரதி அவர்களே ....
நீங்கள் சொல்வதும் மிக சரியே இல்லத்தை ஆள்பவர்களும் அம்மனே ......
நல்ல ஒரு பழமொழி படித்தேன் ...உங்கள் பின்னூட்டத்தில் ...
மனமார்ந்த நன்றிகளுடன் ....
விஷ்ணு
//சென்ஷி said...
நல்லாருக்குங்க கவிதைகள் :)//
மிக்க நன்றிகள் ..சென்ஷி அவர்களே ..
அடிக்கடி வாருங்கள் என
அன்புடன் வேண்டுகிறேன் ...
அன்புடன்
விஷ்ணு
present sir
அதாவது இப்போ போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்
விஷ்ணு,ம்ம்ம்...காதல் கொட்டிக் கிடக்கு கவிதை முழுதும்.எந்த வரிகளை நல்லாயிருக்கு என்று சொல்லலாம் என்று 2-3தடவைகள் தேடினேன் அத்தனையும் காதலின் உணர்வோடு அணைத்தபடி.கொடுத்து வைத்தவர் உங்கள் அன்புத் துணை.
// உருப்புடாதது_அணிமா said...
present sir//
வாங்க தலைவா ..நலமா ??
//உருப்புடாதது_அணிமா said...
அதாவது இப்போ போயிட்டு அப்பாலிக்கா வரேன்னு அர்த்தம்//
வாங்க ..தலைவா ...எப்பவேனாலும் நீங்க வரலாமே ...
அன்புடன்
விஷ்ணு
//ஹேமா said...
விஷ்ணு,ம்ம்ம்...காதல் கொட்டிக் கிடக்கு கவிதை முழுதும்.எந்த வரிகளை நல்லாயிருக்கு என்று சொல்லலாம் என்று 2-3தடவைகள் தேடினேன் அத்தனையும் காதலின் உணர்வோடு அணைத்தபடி.கொடுத்து வைத்தவர் உங்கள் அன்புத் துணை.//
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் ஹேமா அவர்களே ..
நலமா தானே ....
அன்புடன்
விஷ்ணு
நண்பர் விஷ்ணு....
நீண்ட நாள் கழித்து கிளிஞ்சல்கள் பக்கம் வந்திருக்கிறேன். வர வைத்திருக்கிறீர்கள்....
//இப்படி கோட்டை கட்டி குடும்பம்
நடத்துவாய் என !!!!//
கவி வரிகளும் அருமை, நண்பர் ஜோதி பாரதியின் விளக்கமும் அருமை.
//எத்தனை எழுதியும்
காட்டமுடிவதில்லையே
கனிவான
உன் முழு மனதை//
அதுதான் கவிதைக்கு அழகு...எழுத எழுத கவிதை அழகு கூடும்.எவ்வளவு எழுதினாலும் முழுமையாய்க் காட்ட முடியாது அவள் சாரி அவங்க மனதை....
இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதைகளைச் செதுக்குவது நீங்கள் அல்ல அவளே...
படங்கள் அழகெனினும் அந்நிய நாட்டவர் என்பதால் கவிதைக்குச் சற்று அந்நியப் பட்டு நிற்பதாய் ஓர் உணர்வு (எனக்கு மட்டும்)....
//தமிழ்ப்பறவை said...
நண்பர் விஷ்ணு....
நீண்ட நாள் கழித்து கிளிஞ்சல்கள் பக்கம் வந்திருக்கிறேன். வர வைத்திருக்கிறீர்கள்....
//இப்படி கோட்டை கட்டி குடும்பம்
நடத்துவாய் என !!!!//
கவி வரிகளும் அருமை, நண்பர் ஜோதி பாரதியின் விளக்கமும் அருமை.
//எத்தனை எழுதியும்
காட்டமுடிவதில்லையே
கனிவான
உன் முழு மனதை//
அதுதான் கவிதைக்கு அழகு...எழுத எழுத கவிதை அழகு கூடும்.எவ்வளவு எழுதினாலும் முழுமையாய்க் காட்ட முடியாது அவள் சாரி அவங்க மனதை....
இன்னொரு விதமாகச் சொன்னால் கவிதைகளைச் செதுக்குவது நீங்கள் அல்ல அவளே...
படங்கள் அழகெனினும் அந்நிய நாட்டவர் என்பதால் கவிதைக்குச் சற்று அந்நியப் பட்டு நிற்பதாய் ஓர் உணர்வு (எனக்கு மட்டும்)....//
அன்பு நண்பர் தமிழ்பறவை அவர்களுக்கு ..
வணக்கம் ..நீண்ட நாள்
பிறகு வந்து மிக நீண்ட பின்னுட்டம் ..
மிக்க மகிச்சியும் நன்றிகளும் ..
நீங்கள் சொல்வது சரியே ..
எத்தனை எழுதினாலும்
மீண்டும் மீண்டும் திருத்த சொல்லும் ..
ஒரு திருப்தி வருவது கடினமே ..
அதேபோல கவிதைகளை செதுக்குவது அவளே என்ற உங்கள் உங்கள் கருத்தில் ..என்னுள் சிரித்துகொள்கிறேன் ...
:-)))
உள்நாட்டில் இப்படி படங்கள் கிடைக்காதால் வெளிநாட்டவரை நாடவேண்டியதாகி விட்டது நண்பரே ..உங்களை போல திறமை இருந்தால் வரைந்தாவது விடலாம் ..நமக்கு அந்த திறமை இல்லையே ...
மனமார்ந்த நன்றிகள் நண்பரே ...
அடிக்கடி வர வைக்க முயற்சி செய்கிறேன் ..உங்களை ..
அன்புடன்
விஷ்ணு
அருமை விஷ்ணு....
//கடையம் ஆனந்த் said...
அருமை விஷ்ணு....//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ஆனந்த் ...
அன்புடன்
விஷ்ணு
அனைத்தும் அழகு அண்ணா :))
அன்பின் விஷ்ணு... இந்த சிறியக் கவிதைகளில் புதைந்திருக்கும் ஆழமான உணர்வுகள் உங்கள் இரசிகர்களின் பின்னூட்டங்களில் தெரிகிறது! எளிமையாக, இனிமையாக, இதமாக இருக்கிறது ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க...திகட்டுவதே இல்லையே...எப்படி?
பின்னீட்டீங்க தலைவா
கவிதை ,உள்ளத்திலிருந்து வந்தாலே அழ்குதான்.வாழ்த்துக்கள்
விஷ்ணு,மனம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
சுகம்தானே!எங்கே போய்ட்டீங்க.
2009 புதுவருட வாழ்த்துக்களும் கூட.
ஸ்ரீமதி said...
அனைத்தும் அழகு அண்ணா :))
மிக்க நன்றிகள் தங்கையே ...நலமா ?...
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் தங்கையே ..
கொஞ்சம் வேலை அதிகம் அதனால் தான் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ..
அண்ணா
விஷ்ணு
Kanthi said...
அன்பின் விஷ்ணு... இந்த சிறியக் கவிதைகளில் புதைந்திருக்கும் ஆழமான உணர்வுகள் உங்கள் இரசிகர்களின் பின்னூட்டங்களில் தெரிகிறது! எளிமையாக, இனிமையாக, இதமாக இருக்கிறது ஒவ்வொன்றும் படிக்கப் படிக்க...திகட்டுவதே இல்லையே...எப்படி?
மிக்க நன்றிகள் அன்பின் காந்தி அவர்களே ...உங்கள் வருகையும் பாராட்டும் மீண்டும் எனது எழுத்துக்களை அழகாக எழுத தூண்டுகிறது ..
மனமார்ந்த நன்றிகள்
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..
அன்புடன்
விஷ்ணு
monolisa said...
பின்னீட்டீங்க தலைவா
கவிதை ,உள்ளத்திலிருந்து வந்தாலே அழ்குதான்.வாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மோனோலிசா அவர்களே ..அடிக்கடி வாருங்கள் ..
அன்புடன்
விஷ்ணு
ஹேமா said...
விஷ்ணு,மனம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
சுகம்தானே!எங்கே போய்ட்டீங்க.
2009 புதுவருட வாழ்த்துக்களும் கூட.
வாருங்கள் ஹேமா ...நலமா ..எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் ..மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ..
கொஞ்சம் வேலை அதிகம் ..அதனால் தான் வலைத்தளங்கள் வலம் வர முடியாமல் போய் விட்டது ..இப்போது ப்ரீ ஆகி விட்டேன் ..இனி அடிக்கடி வழக்கம் போல் எனது வருகையை எதிர்பார்க்கலாம் ... இடையில் காணாமல் போன உடன் விசாரித்ததில் உங்கள் உண்மை அன்பை புரிந்துகொண்டேன் ..மனமார்ந்த நன்றிகள் ஹேமா ...
அன்புடன்
விஷ்ணு
Post a Comment