உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..
உன்னை
புல்லரிக்கவைக்க
கனவுகளின் பூக்கூடையோடு
நான் என்றும் காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
புல்லரிக்கவைக்க
கனவுகளின் பூக்கூடையோடு
நான் என்றும் காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
என்
கற்பனைகளுக்கு
எட்டாததாய் என்றுமே
உன் கவனிப்புகள்
என்னில் ...
இமைகளை மூடுகிறேன் ..
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு கதைகள்
பேசி இருக்க ...
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு கதைகள்
பேசி இருக்க ...
கனவுகளின் காட்டினில்
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள்
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ ?...
தொடங்கிய
உன் நினைவுகள்
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ ?...
என் கண்களை
அடகு வைத்து விட்டேன்
உன் கனவு பெட்டகத்தில்...
மீட்டு தர
நேரில் நீ என்று வருவாய் ?
வானம் பார்த்து
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
அன்பாக பெய்த அடைமழை நீ...
நனைந்து விட்ட உன் நினைவால்
உயிர் கொடுப்பேன்....
ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....
தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....
கண்களை மூடுடா...
காத்திருக்கிறேன் கனவுகளில்
என நீ அழைப்பதால்..
உறங்கப் போகிறேன்
உனை உடுத்திக்கொள்ள...
13 comments:
//தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....//
விஷ்ணு சுகமா?எங்க ஆளையே காணோம்.இத்தனை நாளும் சேர்த்து வைச்ச வார்த்திகளையெல்லாம் கவிதைத் துளிகளாகக் கோர்த்தெடுத்திருக்கிறீங்க.அருமையான வரிகள் அத்தனையும்.அடிக்கடி நிறைய எழுதலாமே!
அருமை! படங்களும் அருமை!!
//தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....//
//விஷ்ணு சுகமா?எங்க ஆளையே காணோம்.இத்தனை நாளும் சேர்த்து வைச்ச வார்த்திகளையெல்லாம் கவிதைத் துளிகளாகக் கோர்த்தெடுத்திருக்கிறீங்க.அருமையான வரிகள் அத்தனையும்.அடிக்கடி நிறைய எழுதலாமே!//
நலம் ஹேமா ..நீங்கள் நலமா ?...
வேலை காரணம் கொஞ்சம் தாமதமாகிவிட்டது ..
இனி தொடர்ந்து எழுதுகிறேன்
எனது மனமார்ந்த நன்றிகள் ... உங்கள் முதல் பின்னுட்டம் ..
உடன் வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஹேமா ...
அன்புடன்
விஷ்ணு
//ஜோதிபாரதி said...
அருமை! படங்களும் அருமை!!//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஜோதி பாரதி அவர்களே ..
அன்புடன்
விஷ்ணு
படங்களுக்கு கவிதைகளா?
இல்லை
கவிதைகளுக்கு படங்களா?
தோழிக்கு கவிதைகளா?
இல்லை
தோழியின் கவிதைகளா?
நட்பா? காதலா?
எதுவாக இருந்தாலும்
இதமாக இருக்கிறது
பார்க்கவும்...படிக்கவும்...!
Awesome, Vishnu...
மதி....
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..
///
காதல் வந்தாலே
கவிதையும்
வந்துருமே!!!
// நின் said...
படங்களுக்கு கவிதைகளா?
இல்லை
கவிதைகளுக்கு படங்களா?
தோழிக்கு கவிதைகளா?
இல்லை
தோழியின் கவிதைகளா?
நட்பா? காதலா?
எதுவாக இருந்தாலும்
இதமாக இருக்கிறது
பார்க்கவும்...படிக்கவும்...!
Awesome, Vishnu...
மதி....//
பாராட்டிற்கு
மிக்க நன்றிகள் மதி அவர்களே ...
இந்த கவிதைகளை நீங்கள் சொல்லியதுபோல எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துகொள்ளலாம் ..
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
அன்புடன்
விஷ்ணு
//thevanmayam said...
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..
///
காதல் வந்தாலே
கவிதையும்
வந்துருமே!!!//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே ...
என்ன செய்வது
காதலும் கவிதையும்
பிரிக்கமுடியாமல்
பிணைந்து கிடக்கிறதே
நண்பரே ..
அடிக்கடி வாருங்கள் ...
அன்புடன்
விஷ்ணு
உங்கள் கவிதைகளை படித்தேன், உடனே ஞபாகமுட்டியது என் முதல் பருவ கால கவிதைக்கட்டத்தை =) இப்படித்தான் நானும் கிறுக்கிக்கொண்டுயிருந்தேன்.அது ஒரு சுபக்கால அனுபவம் நீங்கள் எப்படி உணவீர் என்று கொஞ்சம் உணர முடிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் அடையும் தூரம் இன்னும் நிறைய விரிந்து கிடக்கு.
//Noorul Ameen said...
உங்கள் கவிதைகளை படித்தேன், உடனே ஞபாகமுட்டியது என் முதல் பருவ கால கவிதைக்கட்டத்தை =) இப்படித்தான் நானும் கிறுக்கிக்கொண்டுயிருந்தேன்.அது ஒரு சுபக்கால அனுபவம் நீங்கள் எப்படி உணவீர் என்று கொஞ்சம் உணர முடிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள், நீங்கள் அடையும் தூரம் இன்னும் நிறைய விரிந்து கிடக்கு.//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ..அடிக்கடி வாருங்கள்
அன்புடன்
விஷ்ணு
Wow very nice poem Vishnu
அருமையான வரிகள்...
//பாலைவனத்தில்அன்பாக பெய்த அடைமழை நீ...நனைந்து விட்ட உன் நினைவால்உயிர் கொடுப்பேன்....ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....//
CUTE!!
// Mathu said...
Wow very nice poem Vishnu
அருமையான வரிகள்...
//பாலைவனத்தில்அன்பாக பெய்த அடைமழை நீ...நனைந்து விட்ட உன் நினைவால்உயிர் கொடுப்பேன்....ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....//
CUTE!!//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மது அவர்களே ...
அன்புடன்
விஷ்ணு
வணக்கம் விஷ்ணு...உங்களின் "கிளிஞ்சல்கள்" படித்தேன்...//சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள்
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ ?...//நினைவுகள்என்றும் அழிவதில்லையே..அதுவும் காதல் நினைவுகள்... வாழ்த்துக்கள்..!
Post a Comment