படிக்காமல் இதை படித்தால்
ஒருவேளை புரிவது கடினமாகலாம் ..
முதல் கடிதம் முதல் வரலாமே ...
கடிதம் : 1
கடிதம் : 2
கடிதம் : 3
கடிதம் : 4

**********
இனிய நண்பர்களே
நீண்ட நாட்களாக கடிதம் போட இயலவில்லை ..
பொருத்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ..
இதற்கிடையில் நடந்த சில விசயங்களை
உங்களிடம் சொல்லி விட வேண்டும் ..
அந்த தோழி அவளது கைபேசி எண்ணுடன்
எனக்கு பதில் அனுப்பி இருந்தாள்
என்று சொல்லி இருந்தேன்... தானே
அடுத்து மனதில் ஆசை
அவள் எப்படி இருப்பாள் என தெரிந்துகொள்ள ..
எனவே எனது நண்பனின் எண்ணப்படி
வலைத்தளங்களில் தேடி பாரடா என்று சொல்ல ..
வேகம் ஓடினேன் ..
எனக்கு அந்த தோழியின்
உண்மை பெயர் கூட தெரியாது தானே ..
எனவே முதல் வேலையாக அவள் கவிதைகளை வைத்து தேடினேன் ..
அதில் சிக்கியது அவளது ஒரு கவிதை ..
கவிதைகள் Community இல் ..
அதை வைத்து
அதை எழுதியவர் Profile சென்றேன் ..
மிக அதிக நண்பர்களுடன் ஒரு தோழி ..
சோகமாய் சிரித்துக்கொண்டு ..
சொந்த புகைப்படத்துடன் ...
எனவே அவள் அறிமுகம் கிடைக்க
அந்த தோழி இவள் தானா ..என உறுதி செய்ய
எனது ஒரு கவிதையை
அவளது Testimonial க்கு அனுப்பி வைத்தேன் ..
இனி நான் இது பற்றி எனது தோழிக்கு எழுதிய கடிதத்தை படியுங்கள் ...
கடிதம்
********
எனதினிய தோழியே நலமா ?..********
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன்
இதோ தொடங்கி விட்டேன் ...
இரண்டு நாட்களுக்கு முன்
ஒரு SMS அனுப்பி இருந்தேன்
கண்டுகொண்டமாதிரியே தெரியவில்லை ..
வலை தளத்தில் ஒரு தோழியை அறிமுகம் ஆனேன்
வாழ்க்கையில்
அடிபட்டவளா தெரியவில்லை ..
அப்படி ஒரு சோகம் முகத்தில் முத்தாராமாய் ..
ஆனால் அதிலும் சிரிக்கிறாள்
ஜீரணிக்க முடியாத சிரிப்பு
அவள் முகத்தில் ....
எனவே எனது கவிதை ஒன்றை
Testimonial ஆக
அவளுக்கு அனுப்பி வைத்தேன்
அதை அவள் முழு மனதாக இணைத்துகொண்டாள்
தனது Testimonial லில் ...
என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை
நன்றி சொல்லவும் இல்லை ..
உனக்கும் அவளுக்கும்
ஓராயிரம் ஒற்றுமைகள் ...
உண்மை சொல்வாயா ??
நீயா அது ???
உன்னை தேடி தேடி
நான் அவளில் போய் நிற்கிறேன்
எனக்கு எதுவும் புரியவில்லை ..??
சீக்கிரம் மெண்டல் ஆகி விடுவேன் என்று நினைக்கிறேன் ..
நான் அந்த தோழிக்கு எழுதிய கவிதை
இங்கு இணைக்கிறேன் உனது பார்வைக்கு ..
அவள் புகைப்படத்தில்
அவள் சிரிப்பை பார்த்த போது தோன்றிய கவிதை ..
சோகம்
*********
*********
உன்
மனதின்
வீணையை
மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற
ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....
இனிய
பௌர்ணமி ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரினாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....
பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்து கொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
- விஷ்ணு
மனதின்
வீணையை
மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற
ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....
இனிய
பௌர்ணமி ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரினாக
சுடுகிறதோ உன்னை !!!....
உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....
பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்து கொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
- விஷ்ணு
நீ அவள் தானா என்பதை
வேகமாய் சொல்லமாட்டாய்
என்று தெரிந்தும்
உனது பதிலை
எதிர்நோக்கி
உனதினிய தோழன்
விஷ்ணு ..
நண்பர்களே ..படித்து விட்டீர்களா ...
இந்த தோழியை தேட
அறிமுகமான புதிய தோழியின்
அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை
மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும்
அதை அவள் மாற்றியதும் வேறு கதை ..
அதையும் அந்த சிரிப்பை மாற்ற
நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும்
இணைக்கிறேன் விரைவில் ..
அன்புடன்
விஷ்ணு
15 comments:
விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கரு உடைத்துக் கவியாய் கடிதமாய் பிரசவம் ஆகியிருக்கிறது.உங்கள் மனம் சமாதானப்பட்டிருக்கும்.
மாப்பிள்ளை...
என்னாது..இது..
கடிதமா..கவிதையா..
மாப்பிள்ளை..உங்கள் வரிகள்
அற்புதம்...வாழ்த்துக்கள்
மண்சட்டி மச்சான்
//ஹேமா said...
விஷ்ணு,ஏதோ சங்கதிகள் உங்கள் மனக் கரு உடைத்துக் கவியாய் கடிதமாய் பிரசவம் ஆகியிருக்கிறது.உங்கள் மனம் சமாதானப்பட்டிருக்கும்.//
வருகைக்கும்
ஆறுதலுக்கு நன்றிகள் தோழியே .. நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...
அன்புடன்
விஷ்ணு
//மண்சட்டி said...
மாப்பிள்ளை...
என்னாது..இது..
கடிதமா..கவிதையா..
மாப்பிள்ளை..உங்கள் வரிகள்
அற்புதம்...வாழ்த்துக்கள்
மண்சட்டி மச்சான்//
வாருங்கள் மச்சான் ...
இது கடிதங்கள் தான் ..
அந்த கடிதத்தில்
ஒரு கவிதை ..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மச்சான் ...
அன்புடன்
விஷ்ணு
Which is the best site to download Tamil MP3 Songs and Telugu MP3 Songs?
அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள் கடிதங்கள் அனைத்தையும் படித்தேன்.
“உங்கள் இனிய தோழன் விஷ்ணு” என்று மிகப் பொருத்தமாகத்தான் ஒப்பம் இடுகிறீர்கள். உங்கள் தோழிகள் பாக்கியம் செய்தவர்களே! உங்களது இரசிகர்களின் பின்னூட்டங்க்ளும் அருமை தான்...!
இந்த புது இரசிகையை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்...என்னடா, புதிதாக வந்து, புரட்டி புரட்டி எடுக்கிறாளே என்று ஏசாதீர்கள், சரியா? :-)
[அது ஒரு பழங்கதை கதை...
அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]
எப்போது??????
[எப்படி இருந்தது பதில் என
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..
இப்போ உறக்கம் வருகிறது ..
நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில்
அனைவரையும் சந்திக்கிறேனே ...]
இது எப்போது??????
[கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...
நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...
அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..]
தெரிந்து கொள்ள ஆசைதான்! இல்லையென்றால் எப்படி உங்கள் கடிதங்கள் பகுதி முற்று பெறும்???
[நண்பர்களே ..படித்து விட்டீர்களா ...
இந்த தோழியை தேடி ஓர்குட்டில்
அறிமுகமான புதிய தோழியின்
அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை
மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும்
அதை அவள் மாற்றியதும் வேறு கதை ..
அதையும் அந்த சிரிப்பை மாற்ற
நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும்
இணைக்கிறேன் விரைவில்]
விரைவில்?????? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!
இடையிடையே உங்கள் கவிதைகளும் அருமை விஷ்ணு...!
உங்கள் இரசிகை
மதி
வழமைபோல அருமை விஷ்னு.
நீண்ட காலத்துக்குப்பின்னர் பதிவு பக்கம் வந்ததற்கு நிறைவாகவிருந்தது உங்கள் கவிதை கடிதங்கள்.
?? நின் said...அன்பின் விஷ்ணு…. எதார்த்தமான உங்கள் கடிதங்கள் அனைத்தையும் படித்தேன்.
“உங்கள் இனிய தோழன் விஷ்ணு” என்று மிகப் பொருத்தமாகத்தான் ஒப்பம் இடுகிறீர்கள். உங்கள் தோழிகள் பாக்கியம் செய்தவர்களே! உங்களது இரசிகர்களின் பின்னூட்டங்க்ளும் அருமை தான்...!
இந்த புது இரசிகையை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்...என்னடா, புதிதாக வந்து, புரட்டி புரட்டி எடுக்கிறாளே என்று ஏசாதீர்கள், சரியா? :-)
[அது ஒரு பழங்கதை கதை...
அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]
எப்போது??????
[அது ஒரு பழங்கதை கதை...
அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...]
எப்போது????????//
விரைவில் எழுதுகிறேன் ...மதி அவர்களே ...
// விரைவில்?????? ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...!
இடையிடையே உங்கள் கவிதைகளும் அருமை விஷ்ணு...!//
மிக நீண்ட பின்னூட்டமுடன் என்னை புரட்டி புரட்டி எடுத்துவிட்டீர்கள் ...
ஏசவில்லை ..பொறுத்துக்கொண்டேன் ..
அடிக்கடி வாருங்கள் ... என அன்போடு வேண்டுகிறேன் ...
வேற வழி ..ரசிகைன்னு சொல்லீடிங்களே ....
:)))
அன்புடன்
விஷ்ணு
//Subash said...
வழமைபோல அருமை விஷ்னு.
நீண்ட காலத்துக்குப்பின்னர் பதிவு பக்கம் வந்ததற்கு நிறைவாகவிருந்தது உங்கள் கவிதை கடிதங்கள்.//
ஆகா தலைவா வாங்க ...
நலமா ?..
மனதிற்கு மிக இதமாக இருக்கிறது உங்கள் வருகை ..
அடிக்கடி வருகை தாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன் ...சிஷ்யனை அடிக்கடி கவனித்துகொள்ளுங்கள் ...
நன்றிகளுடன்
சிஷ்யன்
புதுமையாய் இருந்தது விஷ்னு.
நல்லாவும் இருந்தது.
இன்னும் மற்ற கடிதங்களை படிக்கவில்லை
விரைவில் படித்து விடுகின்றேன்.
\\நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...
\\
நல்ல விடயம் இனிய தோழரே ...
// நட்புடன் ஜமால் said...
புதுமையாய் இருந்தது விஷ்னு.
நல்லாவும் இருந்தது.
இன்னும் மற்ற கடிதங்களை படிக்கவில்லை
விரைவில் படித்து விடுகின்றேன்.//
மிக்க நன்றிகள் அன்பு ஜமால் அவர்களே ... நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கம் வரமுடியாமல் இருந்தது ..அதனால் தான் தாமதமான நன்றிகள் ..
நலமா ?.. இனி தொடர்ந்து வரும் கடிதங்கள் ..நண்பரே ...
அன்புடன்
விஷ்ணு ..
// நட்புடன் ஜமால் said...
\\நடந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன் ..இந்த வலைப்பூவில் ..கடிதங்களால் ...
\\
நல்ல விடயம் இனிய தோழரே ...//
மிக்க நன்றிகள் நண்பரே ...
அன்புடன் விஷ்ணு ..
அடப்பாவி நண்பா! உனக்குள்ள இவ்வளவு திறமையாஇருக்கு?
வாழ்த்துக்கள்
உன் புதிய நண்பனாய்,ரசிகனாய்
சிவா...........................
ஏதோ மனதில் வருத்தம் கொண்டு எழுதியுள்ளீர்கள் போல் உள்ளது நண்பரே. இருப்பினும் வருத்தங்களை செதுக்கிய விதம் அபாரம் வாழ்த்துக்கள் ..............
Post a Comment