இரண்டாவது கடிதம் ....


முதல் கடிதம் போட்டு
பதில் வராத சோகம் மனதில் ...
நாட்கள் நான்கைந்து முடிந்தது ..
இனியும் பதில் வரவில்லை ..
என்ன செய்வது என தெரியவில்லை ..

மனதில் சிறிதாக ஒரு நெருடல்...
தேவை இல்லாமல்..
மடல் எழுதி நமது மரியாதையை
நாமே கெடுத்துகொண்டோமா என ..
இந்த சிந்தனையில் இரண்டு நாட்கள் கடந்தன ...

அடுத்தநாள் ஒரு மடல் கூட
எழுதினால் என்ன என
மீண்டும் மீண்டும் தோன்ற ..
சரி எழுதிவிடலாம் என முடிவு செய்து விட்டேன் ..

ஆனால்..உள்மனம் சொன்னது ..
டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...
வேண்டுமென்றால் சின்னதாக
ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..என ...
அப்படியே எழுதலாம் என முடிவு செய்து
அடுத்த கடிதம் எழுதினேன் ...

என் இனிய தோழியே ...
உன் மடல் வராததால்
உன்மீது அதிக கோபமாக இருந்தேன் .
மன்னிக்க வேண்டுகிறேன் ..
எனக்கு தெரியாது ..
நீ மடல் எழுத நினைத்தபோது
மசி தீர்ந்த கதை ..

அன்புடன்
புரியாத புதிராய்
உன் இனிய நண்பன்
விஷ்ணு ...

இது தாங்க நான்
இரண்டாவதாக அந்த தோழிக்கு எழுதிய மடல் ...
இதுக்கு பதில் வரலைன்னா
இனி கடிதம் போடுவதில்லை என முடிவு செய்து
இதை அனுப்பி விட்டேன் ..
பதில் வந்தது ..
எப்படி இருந்தது பதில் என
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..
இப்போ உறக்கம் வருகிறது ..
நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில்
அனைவரையும் சந்திக்கிறேனே ...

அன்புடன் ...
விஷ்ணு ...