என் இனிய கவிதை தோழியே ...

ரெண்டு நாளு லீவ் ....
அதான் ...நேரம் போகல ...
ஒரு கடிதம் போட்டாச்சு ...
வேற ஏதாவது ..செய்யனுமே ....
விளைவு ... பாருங்கள்.....

அன்புடன்
விஷ்ணு ...


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



Photobucket

Photobucket

கலையாத மௌனம் ...



காலையில் கண் விழித்தபோதே ..
மனதில் ஏதோ ஒரு ...தனி உணர்வு ..
எப்படி என சொல்வது தெரியவில்லை ...
அதோ !!!....என்ன ஆச்சர்யம் ..
எனக்கு பதில் வந்துவிட்டது ...
ரெம்ப மகிழ்ச்சியாகி விட்டது ...
வந்த மடலில் பெரிதாக எதுவும் இல்லை ...

அவளைப்பற்றி இரண்டு வரி ......
என்னை பற்றி அதிக கேள்விகள் ...
உண்மையான பெயர் ...எந்த ஊர் ....எனது கைபேசி எண் எது ....
என கேட்டு அழகாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்..

மீண்டும் பதில் எழுதினேன் ...

என்றும்
இனிய தோழிக்கு
நலம் நலமா?...
உன்னை எப்படி அழைப்பது ?..
நீ ?... நீங்கள் ?...
எனக்கு தெரியவில்லை...
ஒரு வேளை நீ
என்னை விட முதியவளாய் ..
நல்ல குடும்ப தலைவியாக ..
சிறந்த தாயாக.... இல்லை
ஏதாவது ஒரு அதிஷ்டசாலிக்கு..
அழகான காதலியாக....
எனக்கு தெரியவில்லை ...

என்ன வேலை ?.....எங்கு வேலை ?...
எவரெல்லாம் வீட்டில் ?....
என்னவெல்லாம் உன் ஆசைகள் ?..
என ஏராளமான கேள்விகள்
எனக்குள் ....

நீ தானே பதில் எல்லாம்
எனது கற்பனைக்கே விட்டு விட்டு
வேடிக்கை பார்க்கிறாயே ...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி ..
மென்மையானவள் மனதில் ...
அதனால் தானே ...


உன் கவிதைகள் அனைத்தும்
தாலாட்டையே உறங்க வைக்கும்
தனிப்பாட்டாய் நிற்கிறது ..

உன் தொலைபேசி எண்ணை
தெரிவிப்பாய் என நினைத்தேன்...
அதற்கும் மௌனம்...

என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்...


மௌனம் தான் கலையாமல் பேசுவது எப்படி ?..


அதிகம் எழுதிவிட்டேன் ...
அடுத்து உனது பதில் கண்டு ...


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..


அவளைப்பற்றி ..எதுவுமே சொல்லாமல்...
என்னை பற்றி அதிகம் கேட்டதில்...
ரெம்ப பயப்படுகிறாள் என்று மட்டும் தெரிந்தது ...
சரி பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறது என ..
அனுப்பிவிட்டேன்...இந்த மடலை ...
என்ன பார்த்தீங்களே ....என்னோடு கடிதத்தை ...

இதுக்கு மேல சாப்டா ..எப்படிங்க லெட்டர் எழுதறது.....