முதல் கடிதம் ...


எனது இனிய தோழிக்கு ..
உன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது
தினமும் காண வேண்டும் என நினைக்கிறேன்..
என்ன சக்தி அதற்கு என தெரியவில்லை
ஆனால் உன் கவிதைகளால் உன் மென்மையை ....
புரிந்துகொள்ள முடிகிறது ....
என்னை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது
கேட்பதற்கு மனம் இருக்கிறதா என தெரியவில்லை
வாழ்த்து அனுப்பி இருந்தேன்....
வந்ததா என தெரியவில்லை ...
நீயும் பார்க்கவில்லை என நினைக்கின்றேன் ,..

இறைவனுக்கு எத்தனையோ பக்தர்கள்
அர்ச்சனை செய்கிறார்கள் ...எல்லாவற்றையுமா
இறைவன் ஏற்றுக்கொள்ள முடியும் ?...நிறுத்துகிறேன்...
பதில் அனுப்புவாய் என்ற நம்பிக்கை எனக்கில்லை ....
நான் வானத்தில் நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டு இருப்பவன் ...
காரணம் நம்பிக்கை... எண்ணி முடித்து விடலாம் என்று ...
அதுபோல என்னவோ ஒரு நம்பிக்கை ...
நீ பதில் அனுப்புவாய் என்று ...

ஒருவேளை என்னால் நட்சத்திரங்களை
எண்ண முடியாமல் போகலாம் ஆனால்
எனது நம்பிக்கையை நான் விட மாட்டேன் ,..
மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பேன்
எண்ணி விடலாம் என ..
ஏன் நீ பதில் அனுப்புவாய் என்று கூட ,..

நட்பு என்ற தொடர்கதைக்கு
தொடக்க உரை மட்டுமே எழுதி உள்ளேன்,..
முடிவுரை ஆக்காமல்
அடுத்த அத்தியாயத்தை
எழுதுவாய் என எதிர் பார்க்கவில்லை...
முடிந்தால் முயற்சி செய்ய வேண்டுகிறேன் ,..

இப்படிக்கு
உனது கவிதைத்தோழன் என்பதா...
இல்லை உனது தோழன் என்பதா...
இல்லை உனது கவிதை என்பதா...
தெரியவில்லை ..
இப்பவும்
கானல் நீரில் ஈரத்தை
தேடிக்கொண்டிருக்கும்...
விஷ்ணு ...

என்ன பாக்கறீங்க ..
இது தான் எனது முதல் கடிதம் ..
நான் முதல் முதலாக நேரில் பார்க்காத...
சில கவிதைகள் மட்டுமே அவளைப்பற்றி தெரிந்த
ஒரு தோழிக்கு நான் எழுதிய முதல் கடிதம் ...

அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் ..
நிறையவே சொல்லலாம் ..நல்ல பெண் ..
மிக நன்றாக கவிதை எழுதுவாள் ..
அவள் பெயர் ..தெரியாது ..எந்த ஊர்.. அதுவும் தெரியாது..

ஒரு வலைதளத்தில் அவளை எனக்கு அறிமுகம் ..
தினமும் அங்கு நான் ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பேன் கவிதை ..துணுக்குகள் என ..
நான் கவிதை எழுதும் அதே நேரத்திற்கு வருவாள்...
நான் எழுதும் கவிதைக்கு மறு கவிதை போல
எழுதி விட்டு போவாள் ..

இந்த அறிமுகத்தை வைத்து
கடிதம் எழுதி அனுப்பி விட்டேன்
அவள் மின்னஞ்சல் முகவரிக்கு ...
அந்த வலை தளத்தில் உறுப்பினர் பகுதியில்
முகவரி இருக்கும் ....
பதில் வந்ததா ..என்னாச்சு என அடுத்த பகுதியில் சொல்கிறேன் ...
(முதல்ல ஒரு மின்னஞ்சல் வாழ்த்து ...123 greetings...லே பதில் ஒன்னும் வரல ..அந்த வாழ்த்து அவள் பார்க்கவும் இல்லை ..சும்மா இருந்தர முடியுமா ..அதான் அடுத்த லெட்டர் ...அதத்தாங்க நீங்க படிச்சீங்க இப்போ ...)


உங்களுக்கு ஒன்று தெரியுமா ..
நான் பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை என மனதில் உறுதியாக இருந்தவன் ..காரணம்..இருக்கு ...

அது ஒரு பழங்கதை கதை...
அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...
அன்புடன் ...
விஷ்ணு ...

13 comments:

Divya said...

Vishnu,
கடிதம் மிக மிக அழகாக இருக்கிறது,
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க,
பதில்......வந்ததா??

வாழ்த்துக்கள்!

Divya said...

Hi Vishnu,

Have you not yet linked ur blog to tamilmanam?

If not pls do link it, so that many viewers will grab a chance to read ur writings,

http://www.tamilmanam.net/index.html

Vishnu... said...

வருகைக்கும்
வாழ்த்துக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் ...திவ்யா ..

எங்க பதில் வந்திச்சு ...காத்திருந்து காத்திருந்து ...

அடுத்த கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் தான் வந்தது ...திவ்யா

அன்புடன்
விஷ்ணு ...

Vishnu... said...

//Hi Vishnu,

Have you not yet linked ur blog to tamilmanam?

If not pls do link it, so that many viewers will grab a chance to read ur writings,

http://www.tamilmanam.net/index.html//

மிக்க நன்றி திவ்யா ...

இன்றே இணைக்கிறேன் ..
வழி காட்டியமைக்கு
நன்றிகளுடன் ...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

அம்மு said...

vishnu very nice ur feelings keep it up

Vishnu... said...

Hi...

Thank u Ammu ...
Visit again..

Unknown said...

ஹை இது நல்லாருக்கே..!! ;) ம்ம்ம் அப்பறம் என்ன ஆச்சு?? சீக்கரம் சொல்லுங்க...!! :))

Vishnu... said...

//Sri said...
ஹை இது நல்லாருக்கே..!! ;) ம்ம்ம் அப்பறம் என்ன ஆச்சு?? சீக்கரம் சொல்லுங்க...!! :))//

பாராட்டிற்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் ஸ்ரீ அவர்களே ...
அடுத்த கடிதம் ..இதோ விரைவில்
( இரண்டொரு நாட்களில் போஸ்ட் பண்ணி விடுகிறேன் ..வந்து படியுங்களேன் ..தெரிந்து விடும் ...மீதி கதை )

அன்புடன்
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு

Anonymous said...

வணக்கம் விஷ்ணு, கவிதை நன்றாக எழுதுவீங்க என்று நாம் அறிவோம், கதை கூட நன்றாக எழுதுவீங்க என்று இன்று தான் அறிந்தேன்!!

ஆமா இது என்ன உண்மை கதையா அல்ல ?
அதன் பின் என்ன நடந்தது?

Vishnu... said...

இனியவள் அவர்களே ...
முதல் வருகைக்கும்
முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்...
நான் ஏதோ எழுதிகிறேன்
அவ்வளவு தான் ..நன்றாக கவிதை எழுதுவேன் என்றெல்லாம் சொல்ல இயலா ...

இது சொந்த கதை தான் ...
உண்மையில்
நடந்த கடித உரையாடல்களே ...

அடுத்த கடிதம் விரைவில் போஸ்ட் பண்ணுகிறேன் ...

கண்டிப்பாக படியுங்கள் ...

மீண்டும் வர
அன்புடன் வேண்டும்

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

Anonymous said...

yeh,
romba nala iruku writing style.it is really interesting vishnu.

Vishnu... said...

sam said...

yeh,
romba nala iruku writing style.it is really interesting vishnu.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ... அடிக்கடி வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறேன் ..
அன்புடன்
விஷ்ணு

G.T.Arasu said...

அன்பினிய திரு விஷ்ணு
மனதை நெருடும் படைப்புகள்.
எந்தமிழர் படைப்பாற்றல் எமது பீடும்
பெருமையும்.
தொடருங்கள்
அன்புடன்
அரசு