இரண்டாவது கடிதம் ....


முதல் கடிதம் போட்டு
பதில் வராத சோகம் மனதில் ...
நாட்கள் நான்கைந்து முடிந்தது ..
இனியும் பதில் வரவில்லை ..
என்ன செய்வது என தெரியவில்லை ..

மனதில் சிறிதாக ஒரு நெருடல்...
தேவை இல்லாமல்..
மடல் எழுதி நமது மரியாதையை
நாமே கெடுத்துகொண்டோமா என ..
இந்த சிந்தனையில் இரண்டு நாட்கள் கடந்தன ...

அடுத்தநாள் ஒரு மடல் கூட
எழுதினால் என்ன என
மீண்டும் மீண்டும் தோன்ற ..
சரி எழுதிவிடலாம் என முடிவு செய்து விட்டேன் ..

ஆனால்..உள்மனம் சொன்னது ..
டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...
வேண்டுமென்றால் சின்னதாக
ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..என ...
அப்படியே எழுதலாம் என முடிவு செய்து
அடுத்த கடிதம் எழுதினேன் ...

என் இனிய தோழியே ...
உன் மடல் வராததால்
உன்மீது அதிக கோபமாக இருந்தேன் .
மன்னிக்க வேண்டுகிறேன் ..
எனக்கு தெரியாது ..
நீ மடல் எழுத நினைத்தபோது
மசி தீர்ந்த கதை ..

அன்புடன்
புரியாத புதிராய்
உன் இனிய நண்பன்
விஷ்ணு ...

இது தாங்க நான்
இரண்டாவதாக அந்த தோழிக்கு எழுதிய மடல் ...
இதுக்கு பதில் வரலைன்னா
இனி கடிதம் போடுவதில்லை என முடிவு செய்து
இதை அனுப்பி விட்டேன் ..
பதில் வந்தது ..
எப்படி இருந்தது பதில் என
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..
இப்போ உறக்கம் வருகிறது ..
நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில்
அனைவரையும் சந்திக்கிறேனே ...

அன்புடன் ...
விஷ்ணு ...

23 comments:

உருப்புடாதது_அணிமா said...

அடுத்த கடிதத்தில் (பதிவில்) சந்திப்போம்

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
அடுத்த கடிதத்தில் (பதிவில்) சந்திப்போம்//

வாருங்கள் .. அணிமா அவர்களே ..

அடுத்த பதிவில் கண்டிப்பாக சந்திக்கவேண்டும் ..

அன்புடன்
என்றும் இனிய தோழனாக
விஷ்ணு

உருப்புடாதது_அணிமா said...

இவ்ளோ பாசமா கூப்பிடும் போது வராமல் இருப்பேனா??
கண்டிப்பா வருவேன் நண்பரே

உருப்புடாதது_அணிமா said...

///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.///

ஆமாம்.. இது எதுக்கு ??
சின்னபுள்ள தனமால இருக்கு ..

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... இவ்ளோ பாசமா கூப்பிடும் போது வராமல் இருப்பேனா??
கண்டிப்பா வருவேன் நண்பரே//

மிக்க நன்றிகள் நண்பரே ..அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ..

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.///

ஆமாம்.. இது எதுக்கு ??
சின்னபுள்ள தனமால இருக்கு ..//

கவனமா இல்லாட்டி ..
கண்ட விளம்பரமெல்லாம்
comment aa வரும் நண்பரே ..
(அதனால் தான் கூகிள் இப்படி வசதி பண்ணி தந்திருக்கிறார்கள் நமக்காக ..)

என்ன சொல்றீங்க சரி தானே ...
நண்பரே ..

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா
அவர்களுக்கு உங்க ப்ளாகிலே என்னால comment போட முடியலையே என்ன காரணம் ..
கருத்துரையிடுக.... இங்க கிளிக் பண்ணினா..ஒண்ணுமே ஓபன் ஆக மாட்டேங்குதே ...காரணம் என்னவோ...?..

உருப்புடாதது_அணிமா said...

//என்ன சொல்றீங்க சரி தானே ...
நண்பரே ..///

என்னவோ போங்க...
நீங்க சொன்னா சரிதான்..

உருப்புடாதது_அணிமா said...

///கருத்துரையிடுக.... இங்க கிளிக் பண்ணினா..ஒண்ணுமே ஓபன் ஆக மாட்டேங்குதே ...காரணம் என்னவோ...?..///

ஒ.. அது தான் காரணமோ..
நானும் ஏன் நமக்கு ஒரு கமெண்டும் வரல என்று பாத்தேன்..
சரி பண்ணிடுவோம் நண்பரே

உருப்புடாதது_அணிமா said...

உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன்..
கலந்து கொள்ளவும்
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்..

உருப்புடாதது_அணிமா said...

உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன்..
கலந்து கொள்ளவும்
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்..

உருப்புடாதது_அணிமா said...

நீங்க சுட்டி காட்டிய பிறகு தான் தெரிந்தது..பின்னூட்ட பெட்டியில் சில தவறுகள் இருந்தன அந்த
தவறை சரி செய்த பிறகு ஒரே பின்னூட்டம் தான் போங்கள்..
நன்றி...

உருப்புடாதது_அணிமா said...

நீங்க சுட்டி காட்டிய பிறகு தான் தெரிந்தது..பின்னூட்ட பெட்டியில் சில தவறுகள் இருந்தன அந்த
தவறை சரி செய்த பிறகு ஒரே பின்னூட்டம் தான் போங்கள்..
நன்றி...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
உங்களை ஒரு தொடர் ஓட்ட பதிவுக்கு ( விளையாட்டுக்கு) அழைப்பு விடுத்துள்ளேன்..
கலந்து கொள்ளவும்
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்..//
கலந்து கொள்கிறேன் நண்பரே ...( என்னையும் உங்களுடன் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே )

நன்றிகளுடன் ..

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
நீங்க சுட்டி காட்டிய பிறகு தான் தெரிந்தது..பின்னூட்ட பெட்டியில் சில தவறுகள் இருந்தன அந்த
தவறை சரி செய்த பிறகு ஒரே பின்னூட்டம் தான் போங்கள்..
நன்றி...//

எதுக்குங்க நன்றி எல்லாம் ..

அதான் அங்க சினிமாவே...காட்டுராங்களே...
நம்ப மக்கள்
உங்க கம்மென்ட் பாக்சிலே ..

உருப்புடாதது_அணிமா said...

//...( என்னையும் உங்களுடன் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே )//

அழைப்பை ஏற்று கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
//...( என்னையும் உங்களுடன் இணைத்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே )//

அழைப்பை ஏற்று கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்..


நன்றி எல்லாம் எதற்கு நண்பா ...

என்னை மதிச்சு நீங்க கூபிட்டதே பெரிய விஷயம் ...நண்பா ...


அன்புடன் விஷ்ணு ...

Sri said...

//மனதில் சிறிதாக ஒரு நெருடல்...தேவை இல்லாமல்..மடல் எழுதி நமது மரியாதையை நாமே கெடுத்துகொண்டோமா என ..//

நானும் நிறைய முறை, ஏதாவது செஞ்சிட்டு, இப்படி யோசித்ததுண்டு..!! :))

//அடுத்தநாள் ஒரு மடல் கூட எழுதினால் என்ன என மீண்டும் மீண்டும் தோன்ற ..சரி எழுதிவிடலாம் என முடிவு செய்து விட்டேன் ..//

இதே...இதே..!! :))

//ஆனால்..உள்மனம் சொன்னது ..டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...வேண்டுமென்றால் சின்னதாக ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..//

அச்சச்சோ இப்படி தான்..!! :)) எவ்ளோ ஒத்துமை பார்த்தீர்களா அண்ணா?? நீங்கள் எழுதினதும் ஒரு பெண்ணுக்கு நான் எழுதினதும் ஒரு பெண்ணுக்குத் தான்..!! :))

//என் இனிய தோழியே ...
உன் மடல் வராததால் உன்மீது அதிக கோபமாக இருந்தேன் .மன்னிக்க வேண்டுகிறேன் ..எனக்கு தெரியாது ..நீ மடல் எழுத நினைத்தபோது மசி தீர்ந்த கதை ..
அன்புடன் புரியாத புதிராய் உன் இனிய நண்பன் விஷ்ணு ...//

சூப்பர் அண்ணா..!! :)) கோவத்தக்கூட 'அன்பே சிவம்' நல்ல சிவம் மாதிரி பொறுமையா வெளியிட்டது நல்லாருக்கு..!! :))


//எப்படி இருந்தது பதில் என அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..இப்போ உறக்கம் வருகிறது ..நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில் அனைவரையும் சந்திக்கிறேனே ...//

எனக்கு இந்த பதிவிலேயே பிடிக்காத வரிகள் இது தான்..!! :((

Vishnu... said...

நானும் நிறைய முறை, ஏதாவது செஞ்சிட்டு, இப்படி யோசித்ததுண்டு..!! :))

தவறு செய்ய வில்லை என்றாலும் சில நேரங்களில் இப்படி நமக்கு தோன்றுவது இயல்பு தான் தங்கையே ..

( உண்மையில் தங்கை இல்லாத குறை எனக்கு தீர்ந்தது ..
ஆசை தீர அழைப்பேன் ஆயிரம் முறை ..தங்கை... தங்கை என ...)


இதே...இதே..!! :))

//ஆனால்..உள்மனம் சொன்னது ..டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...வேண்டுமென்றால் சின்னதாக ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..//

அச்சச்சோ இப்படி தான்..!! :)) எவ்ளோ ஒத்துமை பார்த்தீர்களா அண்ணா?? நீங்கள் எழுதினதும் ஒரு பெண்ணுக்கு நான் எழுதினதும் ஒரு பெண்ணுக்குத் தான்..!! :)) //


அப்படியா !!!

தங்கையே ..உனக்காவது பதில் வந்ததா?..

Vishnu... said...

Sri said... //சூப்பர் அண்ணா..!! :)) கோவத்தக்கூட 'அன்பே சிவம்' நல்ல சிவம் மாதிரி பொறுமையா வெளியிட்டது நல்லாருக்கு..!! :)) //

என்ன பண்ணுவது தங்கையே ...
முதல் கடிதத்திற்கே..
பதில் இல்லை ..
நாம கோபத்துல ஏதாவது எழுதப்போக பதில் வரலைன்னா ..அதான் ..
கொஞ்சம் மெதுவா அடக்கி வாசித்தேன் ..அந்த கடிதத்தை ..

Vishnu... said...

//Sri said... எனக்கு இந்த பதிவிலேயே பிடிக்காத வரிகள் இது தான்..!! :((//

நான் அந்த பதிவை பதிக்கும்போது எனது நேரம் 11pm ... அதிகாலை நான்கு மணிக்கு எழவேண்டும் ..அதனால்..தான் ..தொடர்ந்து எழுத முடியாமல்.. பதிவை நிறுத்தினேன் ..கோபம் வேண்டாம் தங்கையே .. விரைவில்..அடுத்த கடிதத்தை பதிக்கிறேன் ..

எனது இந்த பதிவிற்கு ..
இத்தனை நீண்ட பின்னூட்டம் ....அதுவும்
ஒவ்வொரு வரிகளையும் எடுத்து சொல்லி ..அதைவிட

அழகாக அண்ணா என அழைத்து
என் அன்பு தங்கை ஆகிவிட்டாய்..

அடிக்கடி இந்த அண்ணனின் கிறுக்கல்களை பார்த்து உன் கருத்துக்களை இந்த அண்ணனிடம் சொல்ல வேண்டும் ..

அன்புடன்
உனது அண்ணா ..

Sri said...

இப்பதான் அண்ணா உங்க பதில பார்க்கிறேன்..!! :))

//உண்மையில் தங்கை இல்லாத குறை எனக்கு தீர்ந்தது ..
ஆசை தீர அழைப்பேன் ஆயிரம் முறை ..தங்கை... தங்கை என..//

ஓஓ தாராளமா சொல்லலாம் அண்ணா..!! :))

//உனக்காவது பதில் வந்ததா//

ஓஓ வந்தது அண்ணா..நானும் பொண்ணுங்கறதால உடனே ரிப்ளே பண்ணாளோ என்னவோ..!! :))

//என்ன பண்ணுவது தங்கையே ...
முதல் கடிதத்திற்கே..
பதில் இல்லை ..
நாம கோபத்துல ஏதாவது எழுதப்போக பதில் வரலைன்னா ..அதான் ..
கொஞ்சம் மெதுவா அடக்கி வாசித்தேன் ..அந்த கடிதத்தை ..//

:)))))))

//நான் அந்த பதிவை பதிக்கும்போது எனது நேரம் 11pm ... அதிகாலை நான்கு மணிக்கு எழவேண்டும் ..அதனால்..தான் ..தொடர்ந்து எழுத முடியாமல்.. பதிவை நிறுத்தினேன் ..கோபம் வேண்டாம் தங்கையே .. விரைவில்..அடுத்த கடிதத்தை பதிக்கிறேன் ..//

ஓஓ அப்படியா..அப்ப ஓகே..:)) ஆனா சீக்கிரம் அடுத்த கடிதத்த போடுங்க..!! :))

//எனது இந்த பதிவிற்கு ..
இத்தனை நீண்ட பின்னூட்டம் ....அதுவும்
ஒவ்வொரு வரிகளையும் எடுத்து சொல்லி //

பிடிச்சிருந்தது..!! :)) அதுக்காக நான் சின்னதா பின்னுட்டம் போட்டா பிடிக்கலைன்னு அர்த்தம் இல்ல..!! :))

//அதைவிட

அழகாக அண்ணா என அழைத்து
என் அன்பு தங்கை ஆகிவிட்டாய்.. //

ஹை அப்படியா நன்றி அண்ணா..!! :))

//அடிக்கடி இந்த அண்ணனின் கிறுக்கல்களை பார்த்து உன் கருத்துக்களை இந்த அண்ணனிடம் சொல்ல வேண்டும் .//

ஓஓ கண்டிப்பா..!! :))

//அன்புடன்
உனது அண்ணா ..//

இது ரொம்ப பிடிச்சிருக்கு...!! :)))))

தமிழ்ப்பறவை said...

நண்பர் விஷ்ணுவுக்கு....
பதிவை எப்போதோ படித்துவிட்டேன்.தாமதப் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
//நீ மடல் எழுத நினைத்தபோது
மசி தீர்ந்த கதை ..
//
இதைவிடச் சிறந்த வரிகள் இவ்விடத்தில் பொருந்தாது. அவர் மடல் அனுப்பாததற்கு,அவர்களுக்கே காரணம் சொல்லித்தந்துவிட்டீர்கள்.