கலையாத மௌனம் ...காலையில் கண் விழித்தபோதே ..
மனதில் ஏதோ ஒரு ...தனி உணர்வு ..
எப்படி என சொல்வது தெரியவில்லை ...
அதோ !!!....என்ன ஆச்சர்யம் ..
எனக்கு பதில் வந்துவிட்டது ...
ரெம்ப மகிழ்ச்சியாகி விட்டது ...
வந்த மடலில் பெரிதாக எதுவும் இல்லை ...

அவளைப்பற்றி இரண்டு வரி ......
என்னை பற்றி அதிக கேள்விகள் ...
உண்மையான பெயர் ...எந்த ஊர் ....எனது கைபேசி எண் எது ....
என கேட்டு அழகாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்..

மீண்டும் பதில் எழுதினேன் ...

என்றும்
இனிய தோழிக்கு
நலம் நலமா?...
உன்னை எப்படி அழைப்பது ?..
நீ ?... நீங்கள் ?...
எனக்கு தெரியவில்லை...
ஒரு வேளை நீ
என்னை விட முதியவளாய் ..
நல்ல குடும்ப தலைவியாக ..
சிறந்த தாயாக.... இல்லை
ஏதாவது ஒரு அதிஷ்டசாலிக்கு..
அழகான காதலியாக....
எனக்கு தெரியவில்லை ...

என்ன வேலை ?.....எங்கு வேலை ?...
எவரெல்லாம் வீட்டில் ?....
என்னவெல்லாம் உன் ஆசைகள் ?..
என ஏராளமான கேள்விகள்
எனக்குள் ....

நீ தானே பதில் எல்லாம்
எனது கற்பனைக்கே விட்டு விட்டு
வேடிக்கை பார்க்கிறாயே ...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி ..
மென்மையானவள் மனதில் ...
அதனால் தானே ...


உன் கவிதைகள் அனைத்தும்
தாலாட்டையே உறங்க வைக்கும்
தனிப்பாட்டாய் நிற்கிறது ..

உன் தொலைபேசி எண்ணை
தெரிவிப்பாய் என நினைத்தேன்...
அதற்கும் மௌனம்...

என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்...


மௌனம் தான் கலையாமல் பேசுவது எப்படி ?..


அதிகம் எழுதிவிட்டேன் ...
அடுத்து உனது பதில் கண்டு ...


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..


அவளைப்பற்றி ..எதுவுமே சொல்லாமல்...
என்னை பற்றி அதிகம் கேட்டதில்...
ரெம்ப பயப்படுகிறாள் என்று மட்டும் தெரிந்தது ...
சரி பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறது என ..
அனுப்பிவிட்டேன்...இந்த மடலை ...
என்ன பார்த்தீங்களே ....என்னோடு கடிதத்தை ...

இதுக்கு மேல சாப்டா ..எப்படிங்க லெட்டர் எழுதறது.....


9 comments:

saki said...

தோழனே நன்றாகவே இருக்கிறது உங்கள கற்பனைக்கடிதமும் கற்பனைக்காதல் அல்லது நிஜ அல்லது தோழி பற்றிய உங்கள் வர்ணனையை ரசித்தேன் : )
வாழ்த்துக்கல் ஆசைகள் நிறைவேற .

Vishnu... said...

// saki said...
தோழனே நன்றாகவே இருக்கிறது உங்கள கற்பனைக்கடிதமும் கற்பனைக்காதல் அல்லது நிஜ அல்லது தோழி பற்றிய உங்கள் வர்ணனையை ரசித்தேன் : )
வாழ்த்துக்கல் ஆசைகள் நிறைவேற .//


அன்பு சகி அவர்களே ..முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ...மிக்க நன்றிகள்... அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...

என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..

(உண்மை கடிதங்களே ...)

ஸ்ரீமதி said...

ஹை அண்ணா போட்டுட்டீங்களா அடுத்தக் கடித்த?? :)) நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைக்கறேன்..!! :(

//காலையில் கண் விழித்தபோதே ..
மனதில் ஏதோ ஒரு ...தனி உணர்வு ..
எப்படி என சொல்வது தெரியவில்லை ...//

ஏதாவது நமக்குப் பிடிச்ச நல்ல விஷயம் நடந்துருக்குன்னா.. இப்படித்தான் எனக்கும் தோணும்..!! :))

//அவளைப்பற்றி இரண்டு வரி ......
என்னை பற்றி அதிக கேள்விகள் ...
உண்மையான பெயர் ...எந்த ஊர் ....எனது கைபேசி எண் எது ....
என கேட்டு அழகாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்.. //

பொண்ணுங்க எப்பவுமே கொஞ்சம் முன்ஜாக்கிரதை முத்தண்ணா தான்..!! ;))

//நீ தானே பதில் எல்லாம்
எனது கற்பனைக்கே விட்டு விட்டு
வேடிக்கை பார்க்கிறாயே ...//

அதுல ஒரு சந்தோஷம்..!! ;))

//உன் கவிதைகள் அனைத்தும்
தாலாட்டையே உறங்க வைக்கும்
தனிப்பாட்டாய் நிற்கிறது ..//

சூப்பர்..!! :)) மெய் மறக்கவைக்கும் வரிகள்..!! :))

//என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்...


மௌனம் தான் கலையாமல் பேசுவது எப்படி ?..//

மௌனம் பேசியதா இல்லையா?? :(

//இதுக்கு மேல சாப்டா ..எப்படிங்க லெட்டர் எழுதறது..... //

இதுக்குமேல சாஃப்ட்டா மைதா மாவுக்கூட இருக்காது..!! :)))

Vishnu... said...

// ஸ்ரீமதி said...
ஹை அண்ணா போட்டுட்டீங்களா அடுத்தக் கடித்த?? :)) நான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்னு நினைக்கறேன்..!! :( //

அண்ணனை மறந்திடாமல் வந்தால் போதும் தங்கையே ..

//ஏதாவது நமக்குப் பிடிச்ச நல்ல விஷயம் நடந்துருக்குன்னா.. இப்படித்தான் எனக்கும் தோணும்..!! :)) //

அப்படியா ,... எனக்கு அப்படி தோன்றும்போதெல்லாம் ஏதாவது மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும் ...சகோதரியே ..

//பொண்ணுங்க எப்பவுமே கொஞ்சம் முன்ஜாக்கிரதை முத்தண்ணா தான்..!! ;)) //

இப்ப நீ சொன்னாயே ..இது நூருலே ..இல்ல இல்ல ..ஆயிரத்தில ஒரு வார்த்தை ..தங்கையே ..

எப்பவுமே முன் ஜாக்கிரதை தான்....அனைவரும் ...


//அதுல ஒரு சந்தோஷம்..!! ;)) //

பதில எதிர் பார்த்திருக்கும் எனது கஷ்டம் யாருக்கு தெரியுது ..

//சூப்பர்..!! :)) மெய் மறக்கவைக்கும் வரிகள்..!! :))//

மிக்க நன்றிகள் தங்கையே ...

//மௌனம் பேசியதா இல்லையா?? :( //

மௌனம் எங்க பேசியது ..
மிஸ் கால் தான் வந்தது ..
அடுத்த கடிதம்
அந்த மிஸ் கால் மேட்டர் தான் ...

//இதுக்குமேல சாஃப்ட்டா மைதா மாவுக்கூட இருக்காது..!! :)))//

மைதா மாவு இவ்வளவு சாப்ட் ஆ ???????

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றியுடன் ..
அடிக்கடி வர வேண்டும் ..
அன்பு
அண்ணன் ...

முத்து குமரன் said...

கலக்கறீங்க விஷ்ணு..
வாழ்த்துக்கள் பல..

எப்படி pitures ல் இவ்ளோ அழகா டைப் பண்றீங்க?

நான் போட்டோ ஷாப் ல் முயற்சி செய்த போது தமிழ் எழுத்துருக்கள் வரவே இல்லை. .

கட் செய்து பேஸ்ட் செய்ய கூட இயலவில்

Vishnu... said...

//முத்து குமரன் said...
கலக்கறீங்க விஷ்ணு..
வாழ்த்துக்கள் பல..

எப்படி pitures ல் இவ்ளோ அழகா டைப் பண்றீங்க?

நான் போட்டோ ஷாப் ல் முயற்சி செய்த போது தமிழ் எழுத்துருக்கள் வரவே இல்லை. .

கட் செய்து பேஸ்ட் செய்ய கூட இயலவில்//

வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே ...
அடிக்கடி வர வேண்டுகிறேன் ...

நானும் போட்டோஷாப்பில் தான் செய்தேன் நண்பரே... முதலில் tamil font உங்கள் கணனியில்
சேர்க்கவும் ... word -ல் tamil support பண்ண வேண்டும் ...பிறகு நீங்கள் word ல் டைப் பண்ணி போட்டோஷாப்பில் copy & paste செய்யவும் பிறகு ..அதே font (tamil)போட்டோஷாப்பில்
செலக்ட் பண்ணினால் போதும் ..

விபரமாக வேண்டுமென்றால்
மெயில் அனுப்புகிறேன்
எனக்கு உங்கள் மெயில் id தரவும்..இல்லை என்றால்
எனது id க்கு மெயில் செய்யுங்கள் ...
pksvichu@hotmail.com

அன்புடன்
விஷ்ணு ...

தமிழ்ப்பறவை said...

இப்படி எல்லாம்கூடப் போட்டு (விபரம்) வாங்கமுடியும் என எனக்கு இத்தனை நாள் தெரியவில்லையே...?!
//என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்..//
அவர்களின் பலமே மௌனம்தான்...

ஜோதிபாரதி said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ,
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_28.html

அன்புமணி said...

தங்களின் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்!