தொண்டு கட்டை ...




அன்புள்ள நண்பர்களே ...


எனது முதல் கடிதத்தில்
நான் சொல்லி இருந்தேன் ...
பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை
காரணம் சொல்கிறேன் என ..

நான் படித்தது ..
ஒரு சிறு கிராமத்தில் ...
ஒரு சிறிய பள்ளியில் ...

எனது தொடக்க கல்வி
அப்படி தான் ..தொடங்கியது ...
நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் ..
அந்த பள்ளி ஒரு தனியார் பள்ளி ..
அங்கு ஆசிரியர்களாக ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் ...
அங்கு நானும் எனது நண்பர்களும்
செய்யாத குறும்புகளே இல்லை எனலாம் ...

அப்பள்ளியில் ஒரு வரவேற்பறை ...
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ...
அந்த வரவேற்பறையில்....
நீங்கள்.. கேள்வி பட்டிருப்பீர்களா என தெரியவில்லை ...

தொண்டு கட்டை ...
இப்படித்தான் அழைப்போம் அதனை ..
ஒரு மூலையில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் ..
அந்த பள்ளியில் நான்
நான்காம் வகுப்பு வரை படித்தேன் ..

ஒரு கட்டையில் ..
சாதாரணமாக அம்மி கல்லில் உள்ள அம்மி போல
ஒரு உருண்ட கட்டை.. அதில் ஒரு சங்கிலியும்
அதனோடு சேர்த்து ஒரு வளையம் பூட்டு...
இத்தியாதி ..சாதனங்கள் சேர்ந்தது தான் தொண்டு கட்டை ...

அந்த தொண்டு கட்டை எதற்கு தெரியுமா ?...
மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களை பயப்படுத்தவும்
நான்காம் வகுப்பு முதல்
தேவை என்றால் (குறும்பு அதிகமானால்)
அதை காலில் மாட்டி ..பூட்டி விடுவார்கள் ..

எங்கு வெளியில் சென்றாலும்
அந்த கட்டையை கையில் எடுத்துக்கொண்டு தான்
செல்ல வேண்டும் ..
வெளியில் நடக்கும்போது
எல்லா பசங்களும் கிண்டலும் செய்வார்கள்
தொண்டு கட்டை என ..கூவி ...

கட்டை மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு போனால் அங்கும் அடி ...
ரெம்ப கொடுமையான தண்டனை அது .
வீதி முழுவதும் தூக்கிக்கொண்டு ...
உறங்கும்போதும் கூடவே ...
நினைக்கவே பயமாக இருக்கு ..
இதில் சக மாணவர்களின் கிண்டல் ..
கட்டை போட காரணம் ..
வீதிகள் வருவோர் போவோர் எல்லாம் கேட்பார்கள் ..
பதில் சொல்ல வேண்டும் ..
அதும் உறவினர்கள் என்றால்
அவர்கள் பங்குக்கு
காரணம் தெரிந்த பின்
வீதியிலேயே ...ரெண்டு அடி தருவார்கள் ...

இது இந்த பள்ளியில் அதிக பட்ச தண்டனை ...
எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கவேண்டும்
என்பதை தலைமை ஆசிரியர் தான் தீர்மானிப்பார்..

இனி விசயத்திற்கு வருகிறேன் ...
நான் நான்காம் வகுப்பு படித்தபோது ..
எனது நெருங்கிய தோழர்கள்
ஆறுமுகம் , மயில்சாமி , அர்ஜுனன், குமார் ..

இதில் ஆறுமுகம் கொஞ்சம் குறும்பு அதிகம் ..
அப்பவே அதிக சினிமா பார்த்தவன் எங்களில் ..
அன்று வழக்கம்போல் காலையில்
நாங்கள் அனைவரும் பள்ளியில் ஆஜர்,..
அப்போது வகுப்பில்
மஞ்சுளா டீச்சர் ..

ரெம்ப நல்லவங்க ...
நல்லா பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க ...
பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கி விட்டது ...
ஆறுமுகம் மும்முரமாக
ஏதோ எழுதிக்கொண்டு இருந்தான் ..
அதும் மீண்டும் மீண்டும் திருத்தி...
பாடத்தில் கவனமாக இருந்ததால்
அவன் என்ன எழுதுகிறான் என்று
நான் கவனிக்கவில்லை ..
காரணம் எனக்கு பிடித்த பாடம் ....

கொஞ்ச நேரத்தில் ..
இண்டெர்வல் விட்டார்கள்..
சரி என நாங்கள் மூன்று பேர் வெளியில் போனோம் ..
ஆறுவை காணவில்லை ...
எங்கே போனான் என தேடியும் கிடைக்கவில்லை ..

பள்ளியில் கழிவறை எல்லாம் கிடையாது ..
கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன மைதானம் வரை
நடந்து போக வேண்டும் ..
எல்லாம் முடிந்து திரும்பி வந்தால் ..
அங்கு வகுப்பில் ஒரே களோபரம் ...

ஆறுவை தலைமை ஆசிரியர்
அடித்துக்கொண்டு இருந்தார் ..
பக்கத்தில் போக பயம்...
வேறு வழி இல்லாமல் பக்கத்தில் போனபோது
எங்களுக்கும் கொஞ்சம் அடி கிடைத்தது ...

விஷயம் தெரியாமல் அடி வாங்கினேன் ...
தொண்டு கட்டை எடுக்கப்பட்டது ..
அன்று ஆறுமுகம் அழுதது
இன்றும் எனக்கு மிக நன்றாக நினைவு இருக்கிறது ...

பாவம் அவன் ...
வகுப்பில் ராஜி என ஒரு வகுப்பு தோழி
அவளுக்கு கடிதம் கொடுத்திருக்கிறான் ..
கடிதம் என்றால்..
சின்ன துண்டு பேப்பருலே
உன்னை பிடிச்சிருக்கு
என்று எழுதி கொடுத்திருக்கிறான் ...
அதை அவள்
மஞ்சுளா டீச்சருக்கு கை மாற
விஷயம் தலைமை ஆசிரியர் வரை போய்
தொண்டு கட்டை போடும் நிலைமைக்கு வந்து விட்டது ...

மூன்று நாட்கள் ரெம்ப கஷ்டப்பட்டான் ..
சில நேரம் நானும் மயிலும்( மயில் சாமி)
மாறி மாறி கட்டையை தூக்கி கொள்வோம்
அவன் பக்கத்தில் நடந்து வருவான்

ஆனால் அவன் ரெம்ப நல்லவன் ..
இதில் ..அவன் ஒரு உண்மையை மறைத்து
என்னை காப்பாற்றி விட்டான் ...
காரணம் ..லெட்டர் கொடு என
ஐடியா கொடுத்ததே நான் தான் ...
அவன் மட்டும் அன்று
நான் தான் லெட்டர் கொடுக்க சொன்னேன் என
சொல்லி இருந்தால்....
அன்று எனக்கும் தொண்டு கட்டை தான் ...

இந்த நிகழ்ச்சி மாறாத வடு போல
மனதில் பதிந்து விட்டது ..
நான் பள்ளிகள் பல மாறியும் ..
கல்லூரி படிப்பிலும்
கடிதம் கொடுக்கும் எண்ணம்
என் மனதில் உதிக்கவே இல்லை
என்பது தான் உண்மை ..
இவ்வளவு மனதில் உறுதியாக இருந்தேன்..

வருடங்கள்..பல கடந்து ..
வேலை பார்க்க தொடங்கி
கடந்த வருடம் தான்
நான் முதல் முதலாக
நான் சொன்னேனே ...
அந்த தோழிக்கு கடிதம் எழுதினேன் ..
அது நீங்கள் முன் படித்தீர்கள் தானே ..

நேரம் கிடைக்கையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து
ராஜியை பலிவாங்கிய நிகழ்வை சொல்கிறேன் ...
அடுத்த கடிதமும் எழுதவேண்டும்

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ..

அன்புடன்
விஷ்ணு ...

36 comments:

ஸ்ரீமதி said...

:))))

உருப்புடாதது_அணிமா said...

:-))))

உருப்புடாதது_அணிமா said...

இப்போதைக்கு கொஞ்சமா பிஸி..

அப்புறமா வந்து தாக்குதல் நடத்துறேன்..

உருப்புடாதது_அணிமா said...

எனது முதல் கடிதத்தில் நான் சொல்லி இருந்தேன் ...பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை காரணம் சொல்கிறேன் ////

இன்னொரு பதிவுக்கு மேட்டர் ரெடி

உருப்புடாதது_அணிமா said...

////எனது முதல் கடிதத்தில் நான் சொல்லி இருந்தேன்///////

பட் இப்போ நீங்க உண்மையான காரணத்தை சொல்லுங்க பாசு

உருப்புடாதது_அணிமா said...

//நான் படித்தது ..ஒரு சிறு கிராமத்தில் ...ஒரு சிறிய பள்ளியில் ... ///

எனக்கு தெரியும்.. ஆனா நான் சொல்ல மாட்டேன்

உருப்புடாதது_அணிமா said...

//எனது தொடக்க கல்வி அப்படி தான் ..தொடங்கியது .///

எல்லோருக்கும் அப்படி தான் ...

உருப்புடாதது_அணிமா said...

//////எனது தொடக்க கல்வி அப்படி தான் ..தொடங்கியது ...நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் .///////

கொஞ்சம் ஓவரா பில்ட் அப்பு மாதிரி இருக்குதே ??

உருப்புடாதது_அணிமா said...

/////அங்கு நானும் எனது நண்பர்களும் செய்யாத குறும்புகளே இல்லை எனலாம் ... //////

ஒ.. அப்பயே ஸ்டார்ட் பண்ணிடீங்களா உங்க விளையாட்ட??

உருப்புடாதது_அணிமா said...

////////ப்பள்ளியில் ஒரு வரவேற்பறை ...எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ...////////

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே ...

உருப்புடாதது_அணிமா said...

//////அந்த வரவேற்பறையில்.... நீங்கள்.. கேள்வி பட்டிருப்பீர்களா என தெரியவில்லை ...
தொண்டு கட்டை///////

எனக்கு தெரிந்தது எல்லாம், நாட்டு கட்டை மட்டும் தான்.

அதுவும் நம்ம நமீதா மாமி மட்டும் தான்.. வேற எதுவும் எனக்கு தெரியாது

உருப்புடாதது_அணிமா said...

///ஒரு மூலையில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் ..அந்த பள்ளியில் நான் நான்காம் வகுப்பு வரை படித்தேன் ..//

எப்படி.. நாலாம் வகுப்பு வரை அதே மூலையில தான் இருந்தீங்கலா??
சொல்லவே இல்லை

உருப்புடாதது_அணிமா said...

//ஒரு கட்டையில் ..சாதாரணமாக அம்மி கல்லில் உள்ள அம்மி போல ஒரு உருண்ட கட்டை.. அதில் ஒரு சங்கிலியும் அதனோடு சேர்த்து ஒரு வளையம் பூட்டு...இத்தியாதி ..சாதனங்கள் சேர்ந்தது தான் தொண்டு கட்டை ...///

நல்ல விளக்கம்..

அதே போல நாட்டு கட்டைக்கு விளக்கம் தேவை என்றால் தனி மடலில் என்னை அணுகவும்..

ஹி ஹி

உருப்புடாதது_அணிமா said...

//////அந்த தொண்டு கட்டை எதற்கு தெரியுமா ///////

என்ன ஸஸ்பெண்சு ??

சொல்லுங்க சொல்லுங்க

உருப்புடாதது_அணிமா said...

////ரெம்ப கொடுமையான தண்டனை அது . வீதி முழுவதும் தூக்கிக்கொண்டு ...உறங்கும்போதும் கூடவே .///

என்ன கொடுமை சார் இது ??

உருப்புடாதது_அணிமா said...

/////இனி விசயத்திற்கு வருகிறேன்///////

அப்போ இவ்ளோ நேரம் சொன்னது எல்லாம், என்ன முன்னோட்டமா???

உருப்புடாதது_அணிமா said...

இப்போதைக்கு அப்பீட்டு..

அப்பாலைக்கா ரிப்பீட்டு ...

Vishnu... said...

//ஸ்ரீமதி said...
:))))//

:))))

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
இப்போதைக்கு கொஞ்சமா பிஸி..

அப்புறமா வந்து தாக்குதல் நடத்துறேன்....//

என்ன ..ரெடி ஆகுறீங்களா தல?...

(ஹார்லிக்ஸ் பூஸ்ட் ...
குடிச்சிட்டு தெம்பா வருவீங்களோ .. பயமா இருக்கே ...)

Vishnu... said...

//இன்னொரு பதிவுக்கு மேட்டர் ரெடி//

உண்மையை பூசனிக்காய் ஒடைக்கற மாதிரி ..இப்படியா போட்டு ஒடைக்கறது தல ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... பட் இப்போ நீங்க உண்மையான காரணத்தை சொல்லுங்க பாசு//

ஐயோ ..உண்மையை சொன்ன நம்ப மாட்டேன்கிறாரே...

இது தாங்க பாசு அது ..

(செந்தில் பணியில் )

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
//நான் படித்தது ..ஒரு சிறு கிராமத்தில் ...ஒரு சிறிய பள்ளியில் ... ///

எனக்கு தெரியும்.. ஆனா நான் சொல்ல மாட்டேன்//

இவரும் தாங்க என்னோடு கிளாஸ் மேட் ...

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...

//எல்லோருக்கும் அப்படி தான் ...//

தொடங்கிட்டாரைய்யா தொடங்கிட்டாரே ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... கொஞ்சம் ஓவரா பில்ட் அப்பு மாதிரி இருக்குதே ??//

வேற வழி இல்ல தலிவா ...

(ச்சே எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ...)

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா ஒ.. அப்பயே ஸ்டார்ட் பண்ணிடீங்களா உங்க விளையாட்ட??//

கூடவே இருந்திட்டு இப்ப ..இன்னா கேள்வி கேக்குற தல...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே ...

நியாபகம் வருதே ...//

அப்பிடியே ஒரு சைக்கிள் ஏற்பாடு பண்ணுனா நல்ல இருக்கும்...
கேட்க தான் முடியும் ...கெஞ்சவா முடியும் ..( அழுதுகொண்டே ....)

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... எனக்கு தெரிந்தது எல்லாம், நாட்டு கட்டை மட்டும் தான்.

அதுவும் நம்ம நமீதா மாமி மட்டும் தான்.. வேற எதுவும் எனக்கு தெரியாது//

உண்மையை ஒத்துக்கொண்ட எங்கள் தலை வாழ்க !!!...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... எனக்கு தெரிந்தது எல்லாம், நாட்டு கட்டை மட்டும் தான்.

அதுவும் நம்ம நமீதா மாமி மட்டும் தான்.. வேற எதுவும் எனக்கு தெரியாது //

தலிவா ..வரட்டா ..எனக்கும் தெரிஞ்சத சொல்லித்தாங்க ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...எப்படி.. நாலாம் வகுப்பு வரை அதே மூலையில தான் இருந்தீங்கலா??
சொல்லவே இல்லை//

கூட இருந்த உங்களுக்கு தெரியாதா தல ..என்ன இது சின்ன புள்ள தனமா கேட்டிட்டு...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... நல்ல விளக்கம்..

அதே போல நாட்டு கட்டைக்கு விளக்கம் தேவை என்றால் தனி மடலில் என்னை அணுகவும்..

ஹி ஹி//

தலிவா ..நேத்தே ..
தனி மடல் அனுப்பி இருந்தேன் இனியும் பதில் வரலையே ...

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...

என்ன ஸஸ்பெண்சு ??

சொல்லுங்க சொல்லுங்க//

சொல்லாம இருந்த விட்டிடுவீங்களா நீங்க ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
என்ன கொடுமை சார் இது ??//

உங்களுக்கு தெரியுது ..அவங்களுக்கு தெரியணுமே ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... அப்போ இவ்ளோ நேரம் சொன்னது எல்லாம், என்ன முன்னோட்டமா???//

ஹி ...ஹி ... :-) (தலையை சொரிந்து கொண்டே .. )

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
இப்போதைக்கு அப்பீட்டு..

அப்பாலைக்கா ரிப்பீட்டு ...//


இனியுமா ஆஆஆஆஆ ???????????????????
துண்ட காணம் துணியக்காணம்டா சாமியே ....ஒடவேண்டியதான் பாக்கி ...

தமிழ்ப்பறவை said...

'தொண்டுகட்டை' இது எங்கள் பள்ளியிலும் இருந்தது. இதற்கு என்ன பெயர் சொல்வோம் என மற்ந்துவிட்டது.
இப்படியொரு விஷயத்தை நினைவூட்டியதற்கு நன்றி நண்பரே...

mathi said...

//நேரம் கிடைக்கையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து
ராஜியை பலிவாங்கிய நிகழ்வை சொல்கிறேன் ...
அடுத்த கடிதமும் எழுதவேண்டும் //

என்ன்ன்னது? ராஜியை பலி வாங்கிட்டீங்களா? அடக்கடவுளே!

பழி யார் மீது விழுந்தது?

லி..ழி.... குழப்பமா?

தவறாக எண்ணவேண்டாம் விஷ்ணு...! கவிதை எழுதறவங்க தப்பு பண்ணா தாங்க முடியலயே?

சரி...எப்போ நேரம் வந்து..நீங்க எப்போதான் எழுதப்போறீங்க?