முப்பத்திரெண்டு ப(தி)ல்லும் நானும் ...

இனிய நண்பர்களே ..
மீண்டும் ஒரு தொடர் பதிவு ..
நீண்ட நாட்களாக வலைப்பக்கம் வரமுடியாமல் இருந்த என்னை ..
என் தங்கையின் அன்பு கட்டளை இதோ இந்த தொடர் பதிவு ...
நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...

( ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ .. ...
ம்ம் ..விஷ்ணு ..எதுக்கும் ஜாக்ரதை ..
அடக்க ஒதுக்கமா பதிலா சொல்லிட்டு
போய்ட்டே இரு .. விவகாரமே வேண்டாம் ...)1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


எனக்கு நானே வைத்து கொண்ட பெயர் ..
எனக்கு மிக பிடித்த பெயரும் கூட ....
இந்த பெயர் எனக்கு பிடிக்க காரணம்
எனது மகனின் பகுதி பெயரையும்
எனது தந்தையின் பகுதி பெயரையும் இணைத்து
எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் ..
அதனால் தான் எனக்கு பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் ..

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

வெளிப்படையாக அழுதது குறைவு ..
சிறு வயதில் என்று கூட சொல்லலாம் ..
என்னை கட்டுப்படுத்த முடியாமல் அழுதது என்றால்
பத்தாம் வகுப்பு படிக்கையில் ..
எனது உடன் படித்த எனது நெருங்கிய தோழனின் மரணம் .. பஸ்
வசதி இல்லாத கிராமத்தில் இருந்து வருபவன் ..
தினமும் டிராக்டரில் வருவது வழக்கம் ..
அன்று டிரைவர் எத்தனை சொல்லியும் கேளாமல்
டிராக்டரில் இணைத்திருக்கும் பின் பெட்டி வண்டியில்
கடைசியில் சாய்ந்து அமர்ந்து படித்துக்கொண்டு வந்திருக்கிறான் ..
ஒரு பள்ளத்தில் எதிர் பாராமல் வண்டி குலுங்க ..
சாய்ந்திருந்த பின் பக்க தடுப்பு சரியாக
கொக்கி இணைக்கப்படாமல் இருந்ததால் திறந்துகொள்ள
இவன் பாண்ட் வண்டியின் கொக்கியில் மாட்டி
நீண்ட தூரம் இழுத்து வரப்பட்டிருக்கிறான் .. தலை தரையில் உரசியபடி ..
அவனது துரதிஷ்டம்
அன்று அவன் மட்டுமே பள்ளிக்கு வந்திருக்கிறான் ..
உடன் வரும் வேறு மாணவர்கள் எவரும் அன்று வரவில்லை ...
இவன் பின்னால் விழுந்ததை
முன்னால் இருக்கும் டிரைவர் கவனிக்க வில்லை ...
அவனை பார்க்க சென்று கட்டுப்படுத்த முடியாமல்
அழுதிருக்கிறேன் நிறையவே .....
அதிலிருந்து மீள மிக அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன்
இன்றும் மறக்காமல் நினைவில் இருக்கிறது ..அந்த காட்சி ...

அதன் பிறகு வெளிப்படையாக அழவே இல்லை எனலாம்
( தாய் தந்தையரின் மரணத்தின் போதும் )
உடன் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நிலையில்
நான் இருந்ததால்
அழுகையை என்னுள்ளே அடக்கி இருந்திருக்கிறேன் ....

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

மிகவும் பிடிக்கும் .. தமிழ் கையெழுத்து
மிக மிக பிடிக்கும் ..

4.பிடித்த மதிய உணவு என்ன?

சைவ உணவு சாதம் சாம்பார் மற்றும் காய்கறிகள் எதுவும் மிக பிடிக்கும் ..
கண்டிப்பாக மோர் அல்லது தயிர் வேண்டும் ..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அனைவரிடமும் பழகுவேன் நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் ..

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டுமே பிடிக்கும் ..
அருவி என்றால் கொஞ்சம் அதிகமே ..
ஒரு வேளை அருவி குளியல் அடிக்கடி இல்லாததால்
அதை கொஞ்சம் அதிகம் பிடிக்கிறது என நினைக்கிறேன் ..

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவர்கள் கண்களை தான் .. ..
என் கண்களை பார்த்து பேசாதவர்களை என்னால் நம்ப முடிவதில்லை ..
( இப்படி ஒரு எண்ணம் மனதில் பதிந்து ..கிடக்கிறது ... .. )

நான் யாருடன் நேரில் பேசினாலும்
கண்களை மட்டுமே பார்த்து பேசுவதுண்டு ..
கொஞ்சம் நெருங்கி விட்டால்
அவர்கள் நடை உடை அனைத்தும் கவனிப்பேன் ..

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம் நான் நானாகவே இன்றும் இருப்பது ..
பிடிக்காத விஷயம் என்றால் எளிதாக எவரையும் நம்பி விடுவது ...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
என்னை விட என் மீது அன்பு வைத்திருப்பது ...

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்படி நிரந்தரமான வருத்தம் எதுவும் இல்லை ..
அவ்வப்போது வீட்டு நினைவு வந்து விட்டால்
அவர்கள் அருகில் இல்லையே என
ஒரு வருத்தம் வாசல் தட்டிவிட்டு போகும் ..


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ரூமில் இருக்கிறேன் இரவு உடைகளாக
வெள்ளை டி .. ஷர்ட் + சாம்பல் கலர் பாண்ட்டும் அணிந்திருக்கிறேன் ..
ம்ம் ..இந்த ஷர்ட் என்ற உடன் நினைவு வருகிறது ...
எனது வலைதளத்தில்

உயிர் பெற மறுக்கின்றன
என் விடியல்கள்
உன்னை கனவில் கண்ட
இரவுகளால் ...


என்ற இந்த வரிகளை படித்து முதலில்
எனது ரசிகையாகி ..
பிறகு நல்ல தோழியானவர்
எனது பிறந்த நாள் பரிசாக
குவைத்திற்கு அவர்களின் நண்பர் மூலம்
இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தது ...
எனது தோழிகளில் என்றும் முன் வரிசையில் இருக்கிறார் ..

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

மானிட்டரை தான் பார்க்கிறேன் ...
மெல்லியசையாக மலையாள பாடல் பின்னணியில் போகிறது ...
கேட்க நினைப்பவர்கள் இணைத்திருக்கிறேன் ..
கேட்கலாம் இனிதாகவே இருக்கும் .....

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு தான் .. அந்த நிறத்தோடு கொஞ்சம் காதல் அதிகமே ..எனக்கு ....

14.பிடித்த மணம் ?

மழை பெய்து ஓய்ந்த பிறகு வரும் மண்ணின் வாசனை மிக பிடிக்கும் ..
பூக்களில் மல்லிகை மணத்தோடு மயக்கம் கொஞ்சம் அதிகம் எனக்கு ..

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அனேகமாக எனக்கு தெரிந்தவர் அனைவருமே ..இந்த பதிவை எழுதிவிட்டனர் ..

இருவரிடமும் இனியும் அனுமதி பெறவில்லை
இருப்பினும் எனது இரண்டு தோழர்களை இந்த பதிவிட அழைக்கிறேன் ..
நண்பர் அணிமா அவர்கள் ..இவரது பதிவுகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும் ..
அதிலும் இல்லாத விஷயத்தை ஊதி பெருசு படுத்துவார் பாருங்கள்
மிக அருமையாக இருக்கும்
நீங்களும் படித்து ரசிக்கலாமே இவரது படைப்புகளை ...

இரண்டாவதாக எனது அடுத்த நண்பர் சுபாஷ் அவர்களை அழைக்கிறேன் ...
கணணி பற்றிய அருமையான பல பதிவுகளை
இவரது வலை தளத்தில் பார்க்கலாம் ..
அனைத்துமே பயனுள்ளவை ..

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
என்னை அழைத்த எனது தங்கையின்
அனைத்து கவிதைகளுமே எனக்கு பிடிக்கும்
நல்ல பல கவிதைகளை இவரது வலை தளத்தில் பார்க்கலாம் ..

17. பிடித்த விளையாட்டு?

கிரிகெட் மற்றும் செஸ் ..
இரண்டுக்குமே நேரம் ஒதுக்க முடிவதில்லை ...

18.கண்ணாடி அணிபவரா?
இது வரை இல்லை ...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத
நம்பும் படியான கதை அமைப்புள்ள
யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..

20.கடைசியாகப் பார்த்த படம்?
தமிழ் என்றால் அயன் ... .
வேறு மொழியில் : மலையாளத்தில் விஸ்மய தும்பத்து என்ற படம் ..

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம் , குளிர் காலம் இரண்டுமே பிடிக்கும் ..
மார்கழி அதிகாலை பொழுதுகள் மிக மிக பிடித்தவை ...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மீண்டும் வரும் நாட்கள் ( கவிதை ..)
மு . புஷ்பராஜன் எழுதியது ..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனது மடிக்கணணியில் உள்ளதை ..அடிக்கடி மாற்றுவேன்
அலுவலகத்தில் மாற்ற முடியாது ..
அப்படி மென்பொருள் இணைக்கப்பட்டது .. அங்கு ..

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மெல்லிசை மிக பிடிக்கும் ..
நான் இருக்கும் இடத்தில்
பாடல் வடிவில் .. எப்போதும் இருக்கும் பின்னில் ...
மலை இடுக்கிலிருந்து வரும் நீரின் சலசல ஓசை மிக பிடிக்கும் ..
கேரளாவில் நிறைய இடங்களில் அனுபவித்திருக்கிறேன்
இந்த ஓசையை ..

தத்தி நடக்கும் சிறு குழந்தையின்
கால் கொலுசின் ஓசை மிக பிடிக்கும் ..

பிடிக்காத சப்தம் ..நிறையவே இருக்கு ...
பட்டியல் இட்டால் மிக அதிகம் வரும் ..
நகரத்தின் இரைச்சல் முதல்
தொடங்கி நீண்டுகொண்டே போகும் ... தொடராய் ...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இப்போது இருக்கும் குவைத் தான் ..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை ..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அனைத்தையுமே ஏற்று கொள்கிறேன் ..
( நடந்து விட்ட அல்லது நடக்க போகும் ஒன்றை
அப்படியே ஏற்று கொள்வேன்
மனம் ஏற்றுகொள்ளாத போது
ஏற்படுகிற ஒரு வித உணர்ச்சிதான் துயரம்...துக்கம்...
என்பது எனது எண்ணம் ...மனம் ஏற்றுகொண்டால் சுமை கூட சுவையாகும்....)

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

" நான் " தான் என நினைக்கிறேன் ...
வெளி வர பலமுறை முயன்றாலும் அடக்கியே வைத்திருக்கிறேன் ...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மலை பிரதேசங்கள் மூனாறு ... மற்றும்
கேரளாவில் உள்ள வனங்கள் ...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

 மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
யோசிக்கவேண்டிய விஷயம் ... உடன் பதில் வரமாட்டேன் என்கிறதே ...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....


ப்பா ..ஒரு வழியா முடிச்சிட்டேன்
மக்கா இது நான் எழுதியது தான் ..
மண்டபத்துல யாரும் எழுதி தரலை ..
குற்றம் குறை இருந்தா அது எவ்வளவுன்னு
பார்த்திட்டு அதற்கான பல்லை மட்டும் .....


அன்புடன்
விஷ்ணு ...


27 comments:

உருப்புடாதது_அணிமா said...

வாங்க வாங்க

உருப்புடாதது_அணிமா said...

எங்கே போனீங்க இம்ப்ட்டு நாளா??

உருப்புடாதது_அணிமா said...

வரும்போதே உங்கள பத்தி அறிந்ததில் மகிழ்ச்சியே

உருப்புடாதது_அணிமா said...

//நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...///

என்ன பன்றது? எனக்கு சனி உச்சத்தில டிஸ்கோ டான்ஸ் ஆடுதே!!!

உருப்புடாதது_அணிமா said...

அழகான பதில்கள்!!!

உண்மையிலே உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மைகிழ்ச்சி அடைகிரேன்.

உருப்புடாதது_அணிமா said...

///ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ ..///

ஓ!!1 இது தான் விஷயமா? இது தெரியாம இவ்ளோ நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்!!!

உருப்புடாதது_அணிமா said...

///நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் .. ///

தெளிவான பதில்.. அருமை

உருப்புடாதது_அணிமா said...

அழைப்புக்கு நன்றி நன்பரே!! ஆனால் இதை பற்றி அனைவரும் பேசிவிட்டார்கள்.. அதனால் மன்னித்துவிடுங்கள்/

உருப்புடாதது_அணிமா said...

//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....///

enna solrathunne therila paas..


anaithu pathilkalum arumai..

ஹேமா said...

விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங்க.இப்போ இத்தனை கேள்வி பதிலகளோட வந்திருக்கீங்க.இனியாச்சும் இருப்பீங்களா இல்ல ஓடிப்போயிடுவீங்களா ?

திகழ்மிளிர் said...

நண்பரே நலமா

வாழ்த்துகள்

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
வாங்க வாங்க //

வாங்க தலைவா .. உங்களையும் அன்போடு வரவேற்கிறேன் ..

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
எங்கே போனீங்க இம்ப்ட்டு நாளா??//என்ன செய்ய நண்பரே ..இந்திய பயணம் ..விடுமுறை என நாட்கள் ஓட .. வலை பக்கம் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ..

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
வரும்போதே உங்கள பத்தி அறிந்ததில் மகிழ்ச்சியே //

அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பரே ..

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
//நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...///

என்ன பன்றது? எனக்கு சனி உச்சத்தில டிஸ்கோ டான்ஸ் ஆடுதே!!! //

அப்படியா தலைவா ..
மியூசிக் யாரு போடுறாங்க ??

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
அழகான பதில்கள்!!!

உண்மையிலே உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மைகிழ்ச்சி அடைகிரேன்.//

மிக்க நன்றிகள் நண்பரே ..

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
///ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ ..///

ஓ!!1 இது தான் விஷயமா? இது தெரியாம இவ்ளோ நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்!!!


எனக்கும் தெரியாது தலைவா .. பதிவுக்கு அழைத்தவர்கள் ..சொன்னபோது தான் தெரிந்தது ..விசயமே ..
வீணாக பிரச்சனை வேண்டாம் என பதிவை போட்டுவிட்டேன் ..

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
///நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் .. ///

தெளிவான பதில்.. அருமை //

மிக்க நன்றிகள் நண்பரே ...

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
அழைப்புக்கு நன்றி நன்பரே!! ஆனால் இதை பற்றி அனைவரும் பேசிவிட்டார்கள்.. அதனால் மன்னித்துவிடுங்கள்/

நண்பரே ..இதற்கு மன்னிப்பெல்லாம் எதற்கு ..நானே மிக தாமதமாக தான் பதிவை இட்டேன் ..
அதுவும் அன்புக்கட்டளையை தட்டமுடியாமல் ..
( இப்ப சரி தலைவா .. ...இனி வரும் நாட்களில் நீங்கள் தப்ப முடியாது ..விடமாட்டேன் ..)

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said...
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....///

enna solrathunne therila paas..


anaithu pathilkalum arumai..//

மிக்க நன்றிகள் நண்பரே ..
முதல் வருகை வந்து ..நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த எனையும் கைகோர்த்து ஆதரித்தமைக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

( அப்பாடா பெரிய தலை ஒரு வழியா Pass குடுத்திட்டாரு .. .... பல்லு போகாம தப்பிச்சாச்சு ..
இனி யாரெல்லாம் வருவாங்களோ ..தெரியலையே ...)

Vishnu... said...

// ஹேமா said...
விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங்க.இப்போ இத்தனை கேள்வி பதிலகளோட வந்திருக்கீங்க.இனியாச்சும் இருப்பீங்களா இல்ல ஓடிப்போயிடுவீங்களா ? //

வருகைக்கும் அன்பான விசாரிப்புகளுக்கும் நன்றிகள் ஹேமா .நீங்கள் நலமா ?? ..இந்திய பயணம் ..விடுமுறை என நாட்கள் ஓட .. வலை பக்கம் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ..
இனி ஓட மாட்டேன் ..கண்டிப்பாக தொடர்ந்து வருவேன் ..
மிக்க நன்றிகள் ஹேமா ..

ஒவ்வொரு வலை பக்கங்களாக போய் கொண்டு இருக்கிறேன் நிறையவே படிக்க இருக்கிறது ..இந்த இடைப்பட்ட நாட்களில் ஹேமா..

Vishnu... said...

// திகழ்மிளிர் said...
நண்பரே நலமா

வாழ்த்துகள் //

நலம் நண்பரே ..நீங்கள் நலமா ?.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ..

valampurisangu said...

yadhaarththamaana padhilgal....mikka nandri.

ஆர்.இளங்கோவன் said...

ஆஹா விஷ்ணு.. வாழ்த்துக்கள்

அன்புடன் இளங்கோவன்
சென்னை

Anonymous said...

ஆஹா உங்களைப்பற்றி அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி
நன்றாக உள்ளது
தாரிணி

கவிநா... said...

உங்களை மூன்று வருடங்களாகத் தெரியும் என்றாலும், உங்களைப் பற்றி தெரியாத பல விஷயங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. இதனை எப்படி படிக்காமல் விட்டேன் என்பதுதான் பெரும் வருத்தமாக இருக்கிறது.

கவிநா... said...

மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது உங்கள் பதில்கள். சில பதில்கள் கவிதையை போலக் கவர்கிறது மனதை...

//1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனது தந்தையின் பகுதி பெயரையும் இணைத்து
எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் ..
அதனால் தான் எனக்கு பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் .
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு தான் .. அந்த நிறத்தோடு கொஞ்சம் காதல் அதிகமே ..எனக்கு ....
14.பிடித்த மணம் ?
மழை பெய்து ஓய்ந்த பிறகு வரும் மண்ணின் வாசனை மிக பிடிக்கும் ..
பூக்களில் மல்லிகை மணத்தோடு மயக்கம் கொஞ்சம் அதிகம் எனக்கு ..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத
நம்பும் படியான கதை அமைப்புள்ள
யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மெல்லிசை மிக பிடிக்கும் ..
நான் இருக்கும் இடத்தில்
பாடல் வடிவில் .. எப்போதும் இருக்கும் பின்னில் ...
மலை இடுக்கிலிருந்து வரும் நீரின் சலசல ஓசை மிக பிடிக்கும் ..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....//

இவையெல்லாம் நான் மிகவும் ரசித்துப்படித்த கேள்வி பதில்கள். மிக்க நன்றி நண்பரே... தங்களைப் பற்றி பகிர்ந்தமைக்கு. மிகத்தாமதமாக வந்ததற்குவருந்துகிறேன்..